கூட்டமைப்போடு ஐ.தே.க ஆட்சியமைத்தால் பிரச்சினை இல்லை’

தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் இணைந்து ஐ.தே.க ஆட்சியமைத்தால் தங்களுக்குப் பிரச்சினை இல்லை என நாடாளுமன்ற உறுப்பினர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.

பிரதமர் அலுவலகத்தில் (27) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துரைக்கும்போது அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

ஐ.தே.கவுக்கு  ஆட்சிய​மைக்க மூன்றிலிரண்டு பெரும்பான்மை இல்லை. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, மக்கள் விடுதலை முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர்களையும் ​இணைத்தே ஐ.தே.க தனக்கு 122 நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருப்பதாக கூறுவதாகவும் அவர் தெரிவித்தார்.

எனினும் மக்கள் விடுதலை முன்னணியினர் ஒரு​போதும் ஐ.தே.கவுக்கு ஆதரவளிக்கப்போவதில்லை எனத்திட்டவட்டமாக தெரிவித்திருப்பதால், அவர்கள் த.தே.கூட்டமைப்போடு இணைந்து ஆட்சியமைக்கலாம் எனவும் அவர் கூறினார்.

எனினும், அரசாங்கத்தை அங்கீகரிக்கும் அதிகாரம் ஜனாதிபதியடமே இருப்பதாகவும், இதற்கு பொதுத்தேர்தலுக்குச் செல்வதே தீர்வு எனவும் அவர் தெரிவித்தார்.

Related posts