தமிழ்-சிங்களப்புத்தாண்டு என்பது தவறு: இந்து-பௌத்த புத்தாண்டு!புதனில் பிறக்கும் புத்தாண்டு புதுமையானது என்கிறார் காந்தன் குருக்கள்

உண்மையில் இது தமிழ்-சிங்களப்புத்தாண்டு அல்ல. மாறாக இந்து பௌத்த புத்தாண்டு என்பதே சரி. ஏனெனில் தமிழ்சிங்கள இனத்திற்குள் கிறிஸ்தவர்கள் பறங்கியர்கள் இருக்கிறார்கள். அவர்களுக்கு இது புத்தாண்டல்ல.எனவே சமய கலாசாரத்தால் இணைந்த இந்து பௌத்த மக்களின் ஜக்கியவபண்டிகையே புத்தாண்டு ஆகும்.
இவ்வாறு கிழக்கின் முக்கிய இந்துப்பிரசாரகரும்  மட்டு – பெரிய போரதீவு பத்ரகாளியம்மன் ஆலய பிரதம குருவான  ஆச்சரிய தீப விஸ்வப் பிரம்ம ஸ்ரீ வை.இ.எஸ்.காந்தன் குருக்கள் கூறினார்.
பிலவ வருட புத்தாண்டையொட்டி அவர் மேலும் கூறுகையில்:
புதனும் சனியும் தன்னைவிட்டுப்போகாது. அதிலும் பொன்கொடுத்தாலும் புதன் கிடைக்காது என்பர். எனவே புதன்கிழமையில் பிறக்கும் பிலவவருடம் நல்ல புதுமைகளைத்தரும் என்பதில் ஜயமில்லை.
இவ்வருட பலாபலனைப்பார்க்கையில் வேளாண்மை கால்நடை நாசமாகும் நோய்த்தாக்கம் மிகும் என்றெல்லாம் கூறப்படுகிறது. இவையில்லாமல் இயற்கையுமில்லை. எதற்கும் நாம் இறைநம்பிக்கையுடன் ஆன்மீகவழிநின்று வாழ்ந்தால் இவற்றையெல்லாம் தவிர்க்கலாம். தெய்வம் நமக்குத்துணை பாப்பா ஒருதீங்குமத் வரமாட்டாது பாப்பா என பாரதியார் அழகாகக்கூறுகிறார். எனவே தெய்வசிந்தனை வழிபாடு அவசியம்.
மார்கழிமாதத்தில் மஞ்சள்குறித்து பூசி விளையாடிய நாங்கள். சித்திரையில் மருத்துநீர்வைத்து ஸ்ஞானம்செய்வோம். மஞ்சள் கிருமிநாசினி மருத்துநீர் உடலாரோக்கியத்திற்கு தேவையான மருத்துவமூலிகைகள் அடங்கியது. எனவே இந்துசமயமானது இயற்கையோடு ஒன்றித்து பயணிக்கும் சனாதனதர்மமாகும்.
நாம் வெறுமனே அரசியலை செய்யப்போய் நடுத்தெருவில் நிற்கிறோம் ஆன்மீகம் கலந்த அரசியலே எமக்குத்தேவை. மகாத்மாகாந்தியும் அஹிம்சைவழி ஆன்மீக அரசியலே செய்தார். தமிழர் பெற்றதை மறந்து அரசியல் செய்யப்புறப்பட்டதால்தான் நாசமேற்பட்டது. ஆன்மீகஅரசியலே இன்றைய காலத்தின் கட்டாயதேவையாகும்.
இதயத்திலிருத்தவேண்டிய தெய்வங்களை பெற்றோர்களை நாம் மறந்துவிட்டோம். எனவே துன்பம் சூழுவதில் நியாயமிருக்கிறது.. எனவே இப்புத்தமாண்டிலாவது தெய்வவணக்கத்துடன் வாழுங்கள் என்றார்.
 
 

Related posts