சம்மாந்துறை வலயக்கல்விப்பணிமனையில் பிரதிக்கல்விப்பணிப்பாளாராக கடந்த 09ஆண்டுகள் கடமையாற்றிய செல்லத்துரை புவனேந்திரன் நேற்று(2) புதன்கிழமை கல்முனை வலயக்கல்விப்பணிமனையில் கடமையை பொறுப்பேற்றார்.
கிழக்கு மாகாணக்கல்வி அமைச்சின் உத்தரவின்பேரில் இவருக்கான இடமாற்றக்கடிதம் கடந்தவாரம் அனுப்பிவைக்கப்பட்டிருந்தது.
இலங்கை கல்வி நிருவாகசேவை அதிகாரியான செ.புவனேந்திரன் காரைதீவைச்சேர்ந்தவர்.
கல்முனை வலயக்கல்விப்பணிமனையின் நிருவாகத்திற்கான பிரதிக்கல்விப்பணிப்பாளராக அவர் நேற்று கடமைகளைப் பொறுப்பேற்றார்.
விஞ்ஞானப்பட்டதாரியான இவர் சிறந்ததொரு நிருவாகியாவார்.