காத்தான்குடி ஆதார வைத்தியசாலை மத்திய சுகாதார அமைச்சின் கீழ் கொண்டு வரப்படவுள்ளது.

கிழக்கு மாகாண சபை நிர்வாகத்தின் கீழ் இயங்கி வந்த காத்தான்குடி ஆதார வைத்தியசாலை மத்திய சுகாதார  அமைச்சின் கீழ் கொண்டு வரப்பட வேண்டும் என்று பாராளுமன்ற உறுப்பினரும் பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழுத் தலைவருமான ஹாபிஸ் இசட். நசீர் அஹமட், பிரதம மந்திரி  மஹிந்த ராஜபக்ஷவிடம் விடுத்த வேண்டுகோளுக்கமைவாக காத்தான்குடி ஆதார வைத்தியசாலை சுகாதார அமைச்சின் கீழ் கொண்டு வரப்படவுள்ளது.
 
இம்முயற்சியில் பாராளுமன்ற உறுப்பினர் நசீர் அஹமட்,  பாராளுமன்ற உறுப்பினர்களான மர்ஜான் பளில், சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ், பைசால் காஸிம், சட்டத்தரணி எஸ்.எம்.எம். முஷாரப், இசாக் ரஹ்மான், அலி சப்ரி ரஹீம், காதர் மஸ்தான் ஆகியோரின் உதவியுடன் பிரதம மந்திரி அவர்களை சந்தித்த போது இதற்கான உடனடி உத்தரவினை பிரதம மந்திரி அமைச்சின் அதிகாரிகளுக்கு வழங்கி வைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts