எமது நாட்டின் பிரச்சினையை ஜெனிவாவுக்குக் கொண்டுசெல்ல நாம் விரும்பவில்லை. எம்மை விசாரிக்கும் அளவுக்கு வெள்ளைக்காரர்கள் யாரும் தூய்மையானவர்கள் இல்லை என அமைச்சர் மனோகணேசன் தெரிவித்துள்ளார்.
நல்லிணக்க அமைச்சின் பதவிகளை (புதன்கிழமை) பொறுப்பேற்ற பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் தெரிவித்த போது, “எமது நாட்டின் பிரச்சினையை நாமே தீர்க்க வேண்டும். அதனை ஜெனிவாவுக்குக் கொண்டுசெல்ல விரும்பவில்லை. எம்மை விசாரிக்கும் அளவுக்கு வெள்ளைக்காரர்கள் தூய்மையானவர்கள் அல்ல.
எமது நாட்டுப் பிரச்சனையைத் தீர்ப்பதற்கு எமது நாட்டிலேயே ஒரு பொறிமுறையை உருவாக்க வேண்டும். அதனையே அரசாங்கம் தற்போது முன்னெடுத்து வருகிறது” எனத் தெரிவித்தார்.
அண்மையில் நடைபெற்ற அமைச்சரவை மாற்றத்தின் போது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பொறுப்பிலிருந்த நல்லிணக்க அமைச்சின் பொறுப்புக்கள் அமைச்சர் மனோகணேசனுக்கு வழங்கப்பட்டிருந்து. அதன் பொறுப்புக்களை ஏற்றபின்னர் தனது கருத்தைத் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.