வாழைச்சேனை கடதாசி ஆலையை மீள் புனரமைப்பு செய்வதற்கு ஜனாதிபதி அனுமதி அளித்திருந்தும், பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அனுமதி அழிக்கவில்லை.இத்தொழிற்சாலையை மீள் புனரமைப்பு செய்வதற்கு பிரதமர் தொடர்ச்சியாக மழுங்கடித்து வருகின்றார் என மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன் தெரிவித்தார்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் உலகவங்கியின் நிதியொதுக்கீட்டில் மேற்கொள்ளப்படவுள்ள திட்டங்கள் பற்றிய கலந்துரையாடல் கூட்டம் திங்கட்கிழமை(25) மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் அரசாங்க அதிபர் மா.உதயகுமார் தலைமையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான சீ.யோகேஸ்வரன், ஞா.ஸ்ரீநேசன்,ஜனாதிபதி செயலணி உறுப்பினர் குகதாசன்,கிழக்கு பல்கலைக்கழகத்தின் முன்னாள் உபவேந்தர் ஜெயசிங்கம்,மற்றும் மாவட்ட திட்டமிடல் உத்தியோகஸ்தர்கள்,கலந்து கொண்டார்கள்.
பாராளுமன்ற உறுப்பினர் மேலும் கருத்து தெரிவிக்கையில்:-வாழைச்சேனை கடதாசி ஆலையானது யுத்த காலத்தில் மூடப்பட்டது.அங்குள்ள இயந்திர சாதனங்கள் ஆயுட்காலம் பாவிக்கக்கூடியதாகும்.இக்கடதாசி சாலையை அக்கறையுடன் திருத்தவில்லை.வாழைச்சேனை கடதாசி தொழிற்சாலையை இயக்குவதற்கு பயிற்றப்பட்ட தொழிலாளிகள் மாவட்டத்தில் இருக்கின்றார்கள்.இங்கு கிடைத்த வருமானத்தை கொண்டுதான் எம்பிலிப்பிட்டியாவில் ஒரு தொழிற்சாலையை உருவாக்கினார்கள்.இதனுடைய வருமானத்தை கொண்டுதான் கொழும்பில் தலைமைக்காரியாலயம் அமைக்கப்பட்டுள்ளது.
வாழைச்சேனை கடதாசி தொழிற்சாலையில் 3000பேர் கடந்த காலங்களில் கடமையாற்றி இருக்கின்றார்கள்.எனது தந்தையாரும் இக்கடதாசி தொழிற்சாலையில் 40வருடங்கள் கடமையாற்றியுள்ளார்.கனத்த குடும்பத்தை காகித ஆலை வாழவைத்துள்ளது.இத்தொழிற்சாலையில் கடந்த காலங்களில் கடமையாற்றிவர்களுக்கு நெல் மற்றும் நன்கொடைகள் பெற்று இருக்கின்றார்கள்.இக்கடதாசி தொழிற்சாலையை மூடியுள்ளதால் தொழிலாளிகள் பலர் தொழிலிழந்து வேதனையில் இருக்கின்றார்கள்.
இத்தொழிற்சாலையை மீள இயக்குதவதற்கு சம்பந்தன் ஐயாவின் முழு முயற்சியுடன் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அவர்களின் கவனத்திற்கு எட்டிவைத்தோம்.சீனாக்(சைனாக்)காரர்கள் வாழைச்சேனை கடதாசி தொழிற்சாலையை இயக்குவதற்கு முனைப்புடன் இணக்கம் தெரிவித்தார்கள்.இதனை அறிந்துகொண்ட ரணில் விக்கிரமசிங்க அவர்கள் சொன்னார் வடகிழக்கில் சீனாக்(சைனாக்)காரர்களை விடுவதில்லை என்று பதிலளித்தார்.அதன் பின்னர் கொரியா அரசாங்கம் 20,000 மில்லியன டொலர்கள் மூலம் காகித ஆலையை இயக்குவதற்கு தயாராகவிருந்தது.
இந்நிதியைக் கொண்டு வாழைச்சேனையை மையப்படுத்தி ரணில் அவர்கள் சுற்றுலா அமைப்பதாக மலிப்பிவிட்டு 20,000 மில்லியன் டொலர்களையும் கொண்டு எம்பிலிப்பிட்டியாவையை அபிவிருத்தி செய்தார்.இதற்கான நிதியை நாங்கள்தான் ஒழுங்குசெய்து கொண்டு வந்தோம்.
தற்போது அபுதாபியில் உள்ள தமிழர்கள் 20,000 மில்லியன் ரூபாய்களைக் கொண்டு வாழைச்சேனை காகிததொழிற்சாலை ஆரம்பிப்பதற்கு ஆர்வமாகவுள்ளார்கள்.நிதிகள் தயாராகவிருந்தும் பிரதமர் அனுமதிதர மறுக்கின்றார்.இவ்விடயமாக ஜனாதிபதி செயலணி கூட்டத்தில் ஜனாதிபதியுடன் இவ்விடயமாக சுட்டிக்காட்டி கதைத்துள்ளேன்.பெருமனதோடு ஜனாதிபதி வாழைச்சேனை காகித தொழிற்சாலையை இயக்குவதற்கு அனுமதி வழங்கியிருந்தார்.
பிரதமரின் முக்கிய நோக்கம் எம்பிலிப்பிட்டியாவை அபிவிருத்தி செய்து சிங்கள மக்கள் மட்டும்தான் வாழவேண்டும் என்பதுதான்.காகித தொழிற்சாலையை மீள் புனரமைப்பை பிரதமர் மழுங்கடிக்கும் நோக்கில் உள்ளார்.இதனை இயக்குவதற்கு கழிவுகளை இறக்குமதி செய்யத் தேவையில்லை.இதன்மூலம் காகித ஆலை ஒருநாளும் நஸ்டத்தில் இயங்காது.
இவ்விடயமாக தமிழ்தேசிய கூட்டமைப்பின் தலைவர் உறுதியாகவுள்ளார்.பணம் தயாராகவுள்ளது.பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மட்டும் அனுமதி வழங்கினால் இத்தொழிற்சாலையை இயக்கி மாவட்டத்தில் உள்ள மூவின மக்களும் தொழில்புரியச் செய்யலாம்.இதனால் மாவட்டத்தின் வறுமை உள்ளிட்ட இளைஞர்,யுவதிகளின் வேலைவாய்ப்புச் பிரச்சனை ஒழிக்கப்படும்.அமைச்சர் ரிசாட் பதியுதீன் தன்னிச்சையாக காகித ஆலைக்கு தவிசாளரை நியமித்துள்ளார்.எங்களின் அனுமதியில்லாமல் தவிசாளரை நியமிக்கமுடியாது எனத்தெரிவித்தார்.