கடந்த யுத்த சூழ்நிலையினால் பெரிதும் பாதிக்கப்பட்டு மட்டக்களப்பில் அமைந்துள்ள சுவிஸ்கிராமத்தில் வசிக்கும் குடும்பப் பெண்ணிற்கு குடிநீர் பெறுவதற்கு சுவிஸ் உதயம் அமைப்பினரால் உதவி வழங்கிவைக்கும் நிகழ்வு 5 ஆம் திகதி வெள்ளிக்கிழமை சுவீஸ் உதயத்தின் கிழக்கு மாகாணத் தலைவர் ஓய்வுநிலைப் பிரதிக்கல்விப்பணிப்பாளர் மு.விமலநாதன் தலைமையில் இடம்பெற்றது
யுத்தத்தினால் அனைத்தினையும் இழந்து தற்போது சுவிஸ்கிராமம் திராய்மடுவில் வசித்துக்கொண்டிருக்கின்ற கனகராசா கேதாரலெட்சுமி எனும் குடும்பப் பெண்ணிற்கு குடிநீர் இணைப்பினைப்பெறுவதற்கான காசோலை வழங்கிவைக்கப்பட்டது.
சுவிஸ் உதயம் அமைப்பின் கிழக்குமாகாணக்கிளையின் ஏற்பாட்டில் சுவிஸ் உதயத்தின் தலைவர் டி.சுதர்சன் பொருளாளர் சமூகசேவகர் க.துரைநாயகம் உபசெயலாளர் ராஜன் அன்பலவானர் மற்றும் நிருவாகக் குழுவினர்களினது ஒத்துழைப்புடனும் இவ் உதவி வழங்கிவைக்கப்பட்டது
இந்நிகழ்வில் மட்டக்களப்பு மகளீர் சமாசத்தலைவி திருமதி செல்வி மனோகர் சுவிஸ் உதயம் அமைப்பினது கிழக்குமாகாணக்கிளையின் பொருளாளர் கலாபூசணம் பாவாணர் அக்கரைப்பாக்கியன் உட்பட நிருவாகத்தினர் கலந்துகொண்டனர்.
இவ் உதவியினை வழங்கிய சுவிஸ் உதயத்தின் தலைவர் செயலாளர் பொருளாளர் மற்றும் நிருவாகத்தினர்களுக்கு கேதாரலெட்சுமி நன்றி தெரிவித்துள்ளார்