நாட்டுக்காக ஒன்றிணைவோம் தேசிய அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டத்தின் நிறைவு விழாவும் முன்னேற்ற மீளாய்வு கூட்டமும் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவின் தலைமையில் இன்று மட்டக்களப்பு வெபர் மைதானத்தில் நடைபெற்றது.
நாட்டுக்காக ஒன்றிணைவோம் நாட்டில் உள்ள அனைத்து மக்களையும் ஒன்றிணைக்கும் முகமாகவே ஆரம்பிக்கப்பட்டது. நாட்டினை முன்னேற்றுவதற்காக அனைவரும் ஒன்றிணைய வேண்டும். அரசியல் கட்சிகள் பேதமென்றி, இனமத பேதமின்றி அனைத்து பேதங்களையும் மறந்து ஒன்றிணையவேண்டும் எனவும் தெரிவித்திருந்தார்.
இங்கு உரையாற்றிய ஜனாதிபதி தொடர்ற்தும் தெரிவித்ததாவது,
அபின், கொக்கைன் உட்பட பல்வேறு போதைப்பொருட்கள் கிழக்கு மாகாண கடற்பரப்பின் ஊடாகவே நாட்டுக்குள் கொண்டு வரப்படுவதாகவும், அவற்றினை கட்டுப்படுத்த பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்கவேண்டும் எனவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கோரிக்கை விடுத்தார்.
போதைப்பொருள் தடுப்பு திட்டம் ஊடாக பல்வேறு வேலைத்திட்டங்களை நாங்கள் முன்னெடுத்து வருகின்றோம். இந்த வேலைத்திட்டத்தினை நாங்கள் புத்தளத்தில் முதன்முதலில் ஆரம்பித்தோம். இதன்கீழ் புத்தளத்தில் பல்வேறு வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டதுடன் இன்னும் வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
இது தொடர்பில் முப்படையினர் உட்பட சகல பாதுகாப்பு பிரிவினரும் கடுமையான நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றனர். கொக்கைன் உட்பட பல்வேறு போதைப்பொருட்கள் கிழக்கு மாகாண கடற்பரப்பின் ஊடாகவே நாட்டுக்குள் கொண்டு வரப்படுகின்றன.
போதைப்பொருள் நாட்டுக்குள் வருவதை தடுப்பதற்கு பல்வேறு வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன. இந்த போதைப்பொருட்கள் நாட்டுக்குள் வருவதை தடுப்பதற்கு மக்களின் உதவி இந்த நாட்டுக்கு தேவைப்படுகின்றது எனவும் தெரிவித்தார்.
நான் இந்த நாட்டின் ஆறாவது ஜனாதிபதி உங்களுக்கு தெரியும் முதலாவது ஜனாதிபதி ஜே.ஆர் ஜேவர்த்தன அந்தவகையில் இந்த நாட்டு மக்கள் 6 ஜனாதிபதியை உருவாக்கியுள்ளீர்கள் .
இந்த 6 ஜனாதிபதிகளில் அதிக தடவை மட்டக்களப்புக்கு வருகை தந்த ஜனாதிபதி என்றால் அது நான் மட்டும்தான்.
ஏறத்தாழ ஒரு வருடத்துக்கு 3 தடவையாவது நான் மட்டக்களப்புக்கு வருகின்றேன். புத்தளம் மட்டக்களப்பு திருகோணமலை ஆகிய மாவட்டங்களுக்கு அபிவிருத்தியில் பிரச்சனை. காரணம் அரசாங்கத்தில் அமைச்சரவை அந்தஸ்து உள்ள அமைச்சர் யாரும் இல்லை இதன் காரணமாக ஒதுக்கப்படும் பணம் மீண்டும் திரும்பி வருகின்றது இதன் காரணமாகவே இந்த மாவட்டங்களை தேர்ந்தெடுத்தேன்.
இங்கு இந்த வேலைத்திட்டத்தினை முன்னெடுப்பவர்கள் . அனைவரும் தமிழர்கள் கடந்த சில நாட்களாக மட்டக்களப்பு மாவட்டத்தில் கிராமம் தோறும் சென்று 840 வேலைத்திட்டங்களை ஆரம்பித்து வைத்துள்ளார்கள்.
இவற்றை தடை செய்வதற்கான பாரிய சேவையில் முப்படையினரும் ஈடுபட்டு கொண்டு வருகின்றார்கள். இவற்றை தடை செய்வதற்கு மக்களது பங்களிப்பும் மிக முக்கியம்.
உங்களுக்கு தெரியும் சிறுநீரக நோய் எவ்வளவு மோசமான நோய் என்று, சிறு நீராக நோய் தடுப்பு வேலைகளுக்காக பாரிய பணத்தை செலவு செய்து வருகின்றோம். இதன் காரணமாக தற்போது பொலநறுவையில் வைத்திய சாலை ஒன்றை திறந்து வைக்கவுள்ளோம். அது இந்த நோய் உள்ள மக்களுக்கு உதவியாக இருக்கும்.
இன்று நான் மட்டக்களப்பில் ஸ்மார்ட் சிறிலங்கா என்னும் விசேட அலுவலகம் ஒன்றை திறந்து வைத்துள்ளேன் மட்டக்களப்பில் வேலை இல்லாத இளையவர்கள் யுவதிகள் பலர் உள்ளனர் அவர்களுக்கு வேலை வாய்ப்பு பெற்று கொடுப்பதற்கான ஒரு வழிகாட்டலாகத்தான் இந்த வேலை திட்டம் அமைந்துள்ளது.
இன்று உங்களை நான் சந்தித்துள்ளேன் இன்னும் 48 மணி நேரத்தில் சிங்கள தமிழ் புத்தாண்டு பிறக்கவிருக்கின்றது இந்த புத்தாண்டை சிங்கள தமிழ் மக்கள் சிறப்பாக கொண்டாடுவார்கள் அது போன்று முஸ்லிம் மக்களும் ஒன்று சேர்ந்துள்ளார்கள் .
நான் இந்த நாட்டு மக்களிடம் ஒரு வேண்டுகோள் விடுக்க விரும்புகின்றேன் இந்த புதுவருடத்தில் நாம் அனைவரும் ஒரு மரம் நடுவோம் இதன் மூலம் சுற்றடால் பாதுகாப்பை உறுதி படுத்த முடியும் இன்று நாம் கொடுக்கவுள்ள தென்னை மற்றும் முந்திரிககை போன்றவற்றை நடவேண்டும் இந்த நாட்டில் பெரும் வரட்சி நிலவு கின்றது.
உண்மையில் மட்டக்களப்பில் அதிகளவான விவசயிகள் இருக்கின்றனர் இவர்களுக்கு நான் நன்றி சொல்லவும்புகின்றேன் இந்த வருடம் அதிக நெல் விளைச்சலை பெற்று கொள்ள முடிந்துள்ளது எனவும் தெரிவித்தார்.