ஆயித்தியமலை புனித சதா சகாய மாதாவின் வருடாந்த திருவிழா சிறப்புடன் கொடியேற்றத்துடன் ஆரம்பமானது.

 

(எஸ்.சதீஸ்)

கிழக்கிலங்கையில் புகழ் பெற்ற மட்டக்களப்பு ஆயித்தியமலை புனித சதா சகாய மாதாவின் 65ஆவது வருடாந்த திருவிழா வெள்ளிக்கிழமை 30ம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமானது.

வெள்ளிக்கிழமை பிற்பகல் 4 மணியளவில் மாதாவின் திருச் செரூப பவனி கரடியனாறு சந்தியிலிருந்து ஆரம்பமாகி ஆயித்தியமலை சதா சகாய மாதா ஆலயத்தை வந்தடைந்தது.

அதனைத் தொடர்ந்து ஆலய பங்குத் தந்தை அன்டனி டிலிமா மற்றும் பங்கு மக்கள் அரச திணைக்கள பிரதிநிதிகளால் பிற்பகல் 5.30 மணிக்கு கொடி ஏற்பப்பட்டு தொடர்ந்து அன்னையின் திருவிழா பூசைகள் நடைபெற்றது.

மட்டக்களப்பு தாண்டவன்வெளி இறை மக்களால் நடாத்தப்பட்ட 1ம் நாள் திருவிழாவில் அருட்தந்தை ரமேஸ் கிருஸ்டி அவர்களால் பூசைகள் நடாத்தப்பட்டு திருவிழா திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டது.

இத் திருவிழாவின்போது, தாண்டவன்வெளி பங்கு மக்கள் மற்றும் ஆயித்தியமலை,கரடியனாறு உள்ளிட்ட பிரதேசங்களைச் சேர்ந்த மக்கள் பெருமளவில் கலந்துகொண்டனர்.

இங்கு வருகைதந்த மக்களுக்கு பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டதுடன் பாதுகாப்புப் பணி தொடர்ந்து இடம்பெறும் என ஆயித்தியமலை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்துள்ளார்.

மேலும் இத் திருவிழாவின் முன் ஏற்பாடுகள் தொடர்பில் பாதுகாப்பு, சுகாதாரம், தண்ணீர் பிரச்சனை, போக்குவரத்து, மின்சாரம் உள்ளிட்ட விடயங்கள் அனைத்தும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக ஆலய நிருவாகத்தினர் தெரிவித்துள்ளனர்.

எதிர்வரும் 8ம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை 7.15 மணிக்கு கூட்டுத் திருப்பலி மட்டக்களப்பு மறை மாவட்ட ஆயர் பொன்னையா ஜேசப் ஆண்டகை அவர்கள் தலைமையில் இடம்பெற்று கொடி இறக்கத்துடன் திருவிழா நிறைவு பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

????????????????????????????????????
????????????????????????????????????

Related posts