சுவிஸ் உதயத்தின் பழையதலைவர் நீக்கப்பட்டு புதிய தலைவராக ரி.சுதர்சன் தெரிவு

சுவிஸ் உதயத்தின் புதிய தலைவராக ரி.சுதர்சன் அவர்கள் ஏகமனதாகத் தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.

சுவிஸ் உதயத்தின் புதிய தலைவரைத் தெரிவுசெய்வதற்கான விஷேட பொதுக் கூட்டம் சுவிஸ் நாட்டின் Dorfstrasse 34,3123  Belp  எனும்   இடத்தில் 1 ஆம் திகதி  ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றபோதே இத்தெரிவு இடம்பெற்றது.

சுவிஸ் உதயம் அமைப்பினுடைய  நடப்பு ஆண்டுக்கான புதிய தலைவராக தெரிவுசெய்யப்பட்டு இருந்தவர் சுவிஸ் உதயத்தின் யாப்பு விதிகளுக்கு அப்பால் தனது செயற்பாடுகளை முரணான முறையில் முன்னெடுத்தமையினாலேயே அவரை பொதுச் சபை நீக்கி புதிய தலைவர் தெரிவு இடம்பெற்றுள்ளதாக அதன் செயலாளர் ஏ.ராஜன் குறிப்பிட்டார்.

அதே வேளை சுவிஸ் உதயம் அமைப்பினுடைய செயற்பாடுகள் யாவும் தலைவர் ரி.சுதர்சன் செயலாளர் ஏ.ராஜன் ,பொருளாளர் கே.துரைநாயகம், உபசெயலாளர் சுபாஸ்கோ , உபபொருளாளர் பேரின்பராசா, உப தலைவர் கே.தியாகராசா ஆகியோருடன் ஏனைய நிருவாக சபை உறுப்பினர்களது ஒத்துழைப்புடன் நடைபெறும் என்பதுடன்  நீக்கப்பட்ட தலைவருக்கும் இவ் அமைப்புக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என்பதனையும் தெரிவித்துள்ளதுடன் இனிவரும் காலத்தில் சுவிஸ் உதயத்தின் நடவடிக்கைகள்  தொடர்பாக அவதூறான பிரச்சாரங்களை மேற்கொள்பவர்களுக்கு எதிராக சட்டநடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்பதனையும் பொதுச்சபையினால் ஏகமனதாக தீர்மானிக்கப்பட்டு இருப்பதாக செயலாளர் தெரிவித்தார்.

Related posts