எமது எதிர்காலச் சந்ததியினரை தொற்றாநோய்களில் இருந்த பாதுகாக்க வேண்டுமானால் அனைவரும் பாரம்பரிய உணவு முறைக்கு மாறவேண்டும்

எமது எதிர்காலச் சந்ததியினரை தொற்றாநோய்களில் இருந்த பாதுகாக்க வேண்டுமானால் அனைவரும் பாரம்பரிய உணவு முறைக்கு மாறவேண்டும் – மாகாணசுகாதர பணிப்பாளர் வைத்தியகலாநிதி கே.முருகானந்தம் தெரிவிப்பு
இன்றையகாலகட்டத்தில் நீரழிவு, புற்றுநோய், விபத்து மூலமே அதிக உயிரிழப்பு ஏற்படுகின்றது. கிழக்காசிய நாடுகளில் மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள வாழ்க்கை முறை மாற்றங்களால் தொற்றநோய்கள் அதிகரித்துள்ளது. இதிலிருந்து விடுபடவேண்டுமாயின் நாம் அனைவரும் பாரம்பரிய உணவு முறைக்கு மாறவேண்டும்
இவ்வாறு கிழக்குமாகாண சுகாதாரப்பணிப்பாளர் வைத்தியகலாநிதி டாக்டர் கே.முருகானந்தம் தெரிவித்தார். கிழக்குப்பல்கலைக்கழக சிரேஸ்ட விரிவரையாளர் வைத்தியகலாநிதி டாக்டர் கே.அருளானந்தம், வைத்தியகலாநிதி டாக்டர் ஞா.கிசோக்காந் ஆகியோர் எழுதி வெளியிட்ட நீரழிவும் சமூகமும் நூல்வெளியீட்டுவிழா குருக்கள்மடம் விபுலானந்தா முதியோர் இல்லத்தில் நடைபெற்றது. கிழக்குப்பல்கலைக்கழக பேராசிரியர்எஸ்.திருக்கணேஸ், லண்டன் வைத்தியநிபுணர் திருமதி காந்தா நிரஞ்சன், வைத்தியநிபுணர் எஸ்.பூலோகநாதன், டாக்டர் என்.நிரஞ்சன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
அங்கு தொடர்ந்து பேசிய கிழக்குமாகாண சுகாதாரப்பணிப்பாளர் டாக்டர் கே.முருகானந்தம் மேலும் தெரிவிக்கையில்…..
மக்களின் வாழ்க்கை முறையில் ஏற்பட்டுள்ள மாற்றத்தினால் புதுப்புது நோய்களின் தாக்கங்களுக்கு உள்ளாகிவருகின்றனர். நோய்களை வரும் முன் காக்கவேண்டும். நீரழிவு நோய் என்பது மெல்லக் கொல்லும் ஒரு வியாதியாகும். இதிலிருந்து எம்மைப்பாதுகாத்துக் கொள்ளவேண்டுமானால் முறையான உற்பயிற்சி, உணவுப்பழக்கவழக்கம் என்பன முக்கியமாகும். இப்போதெல்லாம் நஞ்சுள்ள உணவுகளையே உண்ணவேண்டியுள்ளது. மின் விசிறி அல்லத குளிரூட்டப்பட்ட அறைகளில் இருந்து உடல் வியர்க்காமல் வேலை செய்கின்றனர். உடலுழைப்பு குறைந்துவிட்டது. இதனாலேயே தொற்றாநோய்களும் எம்மை பீடிக்கின்றது.
நீரழிவு நோயுடன் தற்போது சிறுநீரக நோயின் தாக்கமும் அதிகரித்துள்ளத. கிழக்குமாகாணத்தில் திருகோணமலை , மட்டக்களப்பு பகுதிகளில் சிறுநீரக நோயினால் பாதிக்கப்படுபவர்களின் வீதமும் அதிகரித்துள்ளது. இதுவொரு பாரிய பிரச்சினையாகும். இங்குள்ள சகல ஆதாரவைத்தியசாலைகளிலும் சிறுநீரக சுத்திகரிப்பு இயந்திரங்களை பொருத்தும் பணிகளில் ஈடுபட்டுவரகின்றோம். இது கவலைப்படப்கூடிய விடயமாகும். பொதுமக்கள் தங்களுக்கு சிறுநீரக நோய் இருக்கின்றதா என பரிசோதனைகளை செய்து கொள்ளவேண்டும்.
நீரழிவு நோயே பல தொற்றா நோய்கள் உருவாகுவதற்க்கு முக்கிய காரணமாகும். நீரழிவு வராமல் தடுப்பதும், வந்தபின் சிறந்த கட்டுப்பாட்டுடன் அதனை பாதுகாப்பதும் நோயாளிகளின் கடமையாகும். பேற்றோர்கள் பிள்ளைகளுக்கு ஆரோக்கியமான உணவுகளை தயாரித்தக்கொடுக்கவேண்டும். கடைகளில் பொரித்த எண்ணைகளில் மீண்டும் மீண்டும் பொரிக்கப்படும் உணவுகளை வாங்கிகொடுக்கவேண்டாம். புhரம்பரிய உணவு முறைக்கு அனைவரும் மாறவேண்டும். அப்போதுதான் ஆரொக்கியமான சமூகத்தை கட்டியெழுப்பமுடியும் என்றார்.

Related posts