தெரிவுக்குழுவில் ரிஷாட் சாட்சியமளிக்கவில்லை

முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியூதீன் நாடாளுமன்ற விசேட தெரிவுக்குழுவில் சாட்சியமளிப்பதற்காக, இன்று தெரிவுக்குழுவில் முன்னிலையானாலும், தெரிவுக்குழுவின் கோரிக்கைக்கமைய, ​இவரது விசாரணைகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.

எதிர்வரும் 28ஆம் திகதி ரிஷாட் பதியூதீனிடம் விசாரணைகள் முன்னெடுக்கப்படுமென தெரிவுக்குழு தெரிவித்துள்ளது.

நாடாளுமன்ற தெரிவுக்குழுவில் முதலாவதாக, இன்றைய தினம் இராணுவத் தளபதி மஹேஸ் சேனாநாயக்கவின் சாட்சியங்கள் பெறப்பட்டிருந்தன.

இதன் பின்னர், வர்த்தக அமைச்சின் செயலாளர் கே.டீ.என்.ஆர். அசோக்க, தொழிற்றுறை அபிவிருத்தி சபையின் நிறைவேற்றதிகாரி டீ.எல்.யூ. ரன்னமலல ஆகி​யோரின் சாட்சியங்களும் இன்று பதிவு செய்யப்பட்டன.

எனினும் மாலை 5 மணியளவில் விசாரணைகளுக்காக அமைச்சர் ரிஷாட் பதியூதீன் நாடாளுமன்ற தெரிவுக்குழுவுக்கு வருகைத் தந்த போதிலும் விசாரணைகள் 28ஆம் திகதி பிற்பகல் 2 மணிக்கு இடம்பெறும் என்று தெரிவுக்குழு உறுப்பினர்கள் அறிவித்ததால், நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் அங்கிருந்து வெளியேறியுள்ளார்.

Related posts