நாடாளுமன்ற வாக்கெடுப்பு சட்ட ரீதியானது அல்ல – நிமல் சிறிபால டி சில்வா

நாடாளுமன்றத்தில் நடத்தப்பட்ட வாக்கெடுப்பு சட்ட ரீதியானது அல்ல என்று அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற கட்டத் தொகுதியில் நேற்று (வௌ்ளிக்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில், வாக்கெடுப்பு சபாநாயகரின் விருப்பத்திற்கு அமைய இடம்பெற்றது. புதிய அரசாங்கத்தையோ அல்லது பிரதமரையோ அதன் மூலம் நியமிக்க முடியாது என்று அவர் குறிப்பிட்டார்.

இதேவேளை, அரசியல் அமைப்பு மற்றம் நீதிமன்றத் தீர்ப்பை சவாலுக்கு உட்படுத்தி இந்த வாக்கெடுப்பு இடம்பெற்றுள்ளது என நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச குறிப்பிட்டார்.

நேற்றைய நாடாளுமன்றம் நிலையியற் கட்டளை மற்றும் சட்ட ஒழுங்குகளுக்கு எதிராக இடம்பெற்றதாகவும் அதனாலேயே ஆளும் கட்சியினர் புறக்கணித்ததாகவும் சட்ட ரீதியாக நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டு வரப்பட்டால் அதற்கு அரசாங்கம் முகம் கொடுக்க தயார் எனவும் விமல் வீரவன்ச தெரிவித்தார்.

Related posts