போக்குவரத்து அமைச்சில் இடம்பெற்ற பேச்சுவார்த்தையை அடுத்து பணிப்பறக்கணிப்பை கைவிட்டனர்.

அம்பாறை மாவட்டம் கல்முனை இ.போ.ச. பஸ் ஊழியர்கள் கடந்த திங்கட்கிழமை (16) ஆம் திகதி ஆரம்பித்த பணிப்பகிஸ்கரிப்பு  புதன்கிழமை  தொடர்ந்த நிலையில் கொழும்பில் போக்குவரத்து அமைச்சில் இடம்பெற்ற பேச்சுவார்த்தையை அடுத்து பணிப்பறக்கணிப்பை  மாலை கைவிட்டனர்.

இந்நிலையில் வியாழக்கிழமை  (19)  கல்முனை பிராந்தியத்தில் பஸ் சேவைகள் வழமை போன்று ஈடுபடத்தொடங்கியுள்ளன.
 
இதனால் பாடசாலை மாணவர்களும் அரச ஊழியர்களும் எவ்வித சிரமமுமின்றி இ.போ.ச. பேரூந்தில் பயணம் செய்ததை காணமுடிந்தது.
 
 
கடந்த திங்கட்கிழமை(16) தொடக்கம் சம்பளப் பிரச்சினை பதவி உயர்வு, தற்காலிக ஊழியர்கள் நிரந்தர நியமனம்  உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து, இலங்கைப் போக்குவரத்துச் சபை ஊழியர்கள், நாடளாவிய ரீதியில் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டதுடன் சிறிலங்கா சுதந்திர தேசிய போக்குவரத்து ஊழியர் சங்கம், அகில இலங்கை மோட்டார் ஊழியர் சங்கம், இலங்கைப் போக்குவரத்து சபை ஊழியர் சங்கம் ஆகியன இணைந்து மேற்கொண்டுள்ள இவ்வேலை நிறுத்தப் போராட்டத்தால் பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்தும் பெருந் தொகையான பயணிகள் பலத்த சிரமங்களை எதிர்நோக்கி இருந்தனர்.
 
போக்குவரத்துச் சபை ஊழியர்களின் இப்பணிப் பகிஷ்கரிப்பால் பெருந்தொகையான பயணிகள், பஸ் தரிப்பு நிலையத்தில் நிறைந்து காணப்படுகின்றனர். நீண்ட தூரம் பயணிக்கும் 
மாணவர்கள், பெண்கள், வயோதிபர்கள் பல்வேறு சிரமங்களை எதிர்நோக்கியமை  குறிப்பிடத்தக்கது.

Related posts