வலுவிழப்புடன் கூடிய நபர்களுக்கான அமைப்புகளுக்கு வலுப்படுத்தும் தொடர்பான இரு நாள் கருத்தரங்கு.

இலங்கையில் கிழக்கு மற்றும் தென் மாகாண வலுவிழப்புடன் கூடிய நபர்களின் சமூக சேவைகளை அணுகும் மற்றும் உள்வாங்கப்பட்ட அபிவிருத்தி இலக்கை அடைதல் திட்டங்களின் ஒரு கட்டமாகநவஜீவன தன்னார்வ தொண்டு நிறுவனமானது சி.பி.எம். நிறுவனமானத்தின் அனுசரணையில்அம்பாறை மாவட்டத்தில்
செயற்படுத்தி வரும் வலுவிழப்புடன் கூடிய நபர்களுக்கான அமைப்புகளுக்கு வலுப்படுத்தும் தொடர்பான இரு நாள் கருத்தரங்கு. (16) இடம் பெற்றதுடன் அதன் தொடர்ச்சி (17) கல்முனை கிரிஸ்தா இல்ல வரவேற்பு மண்டபத்தில் இடம் பெறவுள்ளது.
 
அம்பாறை மாவட்ட நவஜீவன அமைப்பின் இணைப்பாளர் ரி.டி.பத்ம கைலநாதன் தலைமையில் இடம் பெற்ற இந்நிகழ்வில் கல்முனை வடக்கு மற்றும் நாவிதன்வெளி பிரதேச செயலக பிரிவில் உள்ளவலுவிழப்புடன் கூடிய நபர்களின் பிரதிநிதிகள் 56பேர்கள் கலந்து கொண்டார்கள்.
 
நவஜீவன அமைப்பின் தலைமைக் காரியாலயத்தில் சுகாதார மற்றும் புனர்த்தான விடயங்களுக்கு பொறுப்பான இணைப்பாளர் எச்.ஆர்.பிரசங்க சிறப்பு பிரதிநிதியாக கலந்து கொண்டதுடன் இந்நிகழ்வின் பிரதான வளவாளர்களாக
வலுவூட்டல் நிகழ்வுக்கான வளவாளர் தர்மலிங்கம் கணேஸ் கலந்து கொண்டு பயிற்சிகளை வழங்கினார். இதன் போது வலுவிழப்புடன் கூடிய அமைப்புக்களின் செயற்பாடுகள், அதன் நிர்வாக முறைகள், பிரச்சினைகளை கையாழுதல், வளங்களை திரட்டும் செயல்முறைகள், சமூக மட்ட குழுக்களுக்கு உள்ள ஆயத்த நிலைகள் மற்றும் ஏனைய நிறுவனங்களுக்கும் வலுவிழப்புடன் கூடிய அமைப்புக்கும் உள்ள தொடர்புகள் பற்றியும் விளக்கமளிக்கப்பட்டது.

Related posts