2018க்கான இமயத்திற்கான சமர் கிண்ணத்தை சுவீகரித்தது பெரியகல்லாறு மத்தியகல்லூரி

2018க்கான இமயத்திற்கான சமர் கிண்ணத்தை சுவீகரித்தது பெரியகல்லாறு மத்தியகல்லூரிபெரியகல்லாறு மத்தியகல்லூரிக்கும் மட்டக்களப்பு இந்தக்கல்லூரிக்கும் இடையே கடந்த 8வருடங்களாக நடைபெற்றுவரும் இமயத்திற்கான (2018) கிரிக்கற் சமர் மட்டக்களப்பு சிவானந்தா வித்தியாலய விளையாட்டு மைதானத்தில் சனியன்று (26) நடைபெற்றபோது, பெரியகல்லாறு மத்தியகல்லூரி 72 ஒட்டங்களால் வெற்றிவாகை சூடியது. வெற்றிபெற்ற மத்திய கல்லூரி வீரர்களை பட்டிருப்பு வலய கல்விப் பணிப்பாளர் ஆர்.சுகிர்தராஜன் நேற்று திங்கள் (28); காலை பாடசாலைக்குச் சென்று நேரடியாக வாழ்த்துக்களையும் பாராட்டையும் தெரிவித்தார்.;;

சனியன்று மிகவும் கோலாகலமான முறையில் மட்டக்களப்பு கல்லடி சிவானந்தா வித்தியாலய விளையாட்டு மைதானத்தில் மட் இந்துக் கல்லு10ரி அதிபா எஸ்.டி.முரளிதரன் தலைமையில் ஆரம்பமான மேற்படி கிரிககற் சமர். மிகவும் பரபரப்பாக நடைபெற்றது.

முதலில் துடுப்பெடுத்தாடிய பெரியகல்லாறு மத்தியகல்லூரி அணியினர் மிகவும் சிறப்பாக துடுப்பெடுத்தாடி 174 ஒட்டங்களை குவித்தனர். பதிலுக்கு 175 என்ற இலக்கை அடைவதற்கு துடுப்பெடுத்தாடிய இந்துக்கல்லூரி அணியினர் 36 ஓவரில் சகல விக்கட்டுக்களையும இழந்து 103 ஒட்டங்களை மட்டும் nhற்று பெரியகல்லாறு மத்திய கல்லூரியை இலகுவாக வெற்றிபெறச் செய்தனர்.

சிறந்த துடுப்பாட்டவீரராக லுக்சாந்தும்; (60), ஆட்டநாயகனாக தனுசும் (47), சிறந்த களதடுப்பாளராக அபிலக்சனும் தேர்ந்தெடுக்கப்படடனர். மூவரும் பெரியகல்லாறு மத்தியகல்லூரி அணியைச் சேர்ந்த வீரர்களாகும்.

2017வரை நடைபெற்ற போட்டிகளில் மட் இந்துக்கல்லூரி 4 போட்டிகளிலும், பெரியகல்லாறு மத்திய கல்லூரி 4 போட்டிகளிலும் வெற்றி பெற்று மட்டக்களப்பு இந்துக் கல்லூரி முன்னிலையில் இருந்தது. தற்போது இரு அணிகளும் தலா 4 போட்டிகளில் வெற்றிபெற்று சமநிலையை அடைந்துள்ளன. அத்துடன் இம்முறையே அதிக ஓட்ட வித்தியாசத்தில (72); சமர் வெல்லப்பட்டுள்ளது.

பட்டிருப்பு வலய கல்விப் பணிப்பாளர் ஆர்.சுகிர்தராஜன் தனது வலயத்தில் உள்ள பாடசாலைகள் சாதனை புரியும் போது அப்பாடசாலைக்கு தாமதியாது சொல்லாமல் கொள்ளாமல் நேரடியாகச் சென்று சாதனை புரிந்த மாணவர்களை வாழத்திப் பாராட்டி உற்சாகப்படுத்தும்; உயர் பண்மை கொண்டவராக இருப்பது ஒரு முன்மாதிரியான செயற்பாடாகும்.

 

Related posts