அதிபர்களுக்கு குருபிரதீபா விருதுகள்

 

கல்வியமைச்சின் ஏற்பாட்டில் கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மகாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்ற அதிபர்களுக்கான குருபிரதீபா விருது வழங்கல் நிகழ்வில் மட்டக்களப்பு கல்விவலயத்திற்குட்பட்ட மட்/பட்/ திருப்பெருந்துறை ஸ்ரீமுருகன் வித்தியாலய அதிபர் சோமசுந்தரம் தர்மசீலன் அவர்களும் மட்/பட்/ அமிர்தகளி ஸ்ரீவித்திவினாயகர் ம.வி அதிபர் நவகீதா தருமசீலன் ஆகிய இருவரும் இவ்விருதுகளை பெற்றுள்ளனர்
தங்கள் பாடசாலைகளில் மேற்கொள்ளப்பட்ட அர்ப்பணிப்பான அதிபர் சேவைக்கே இவ்விருதுகள் கிடைத்துள்ளது.

Related posts