அதிபர் பேரானந்தம் அவர்கள் தனது 35 வருட கல்விச்சேவையில் இருந்து ஓய்வு

 

சம்மாந்துறை கல்விவலயத்திற்குட்பட்ட சவளக்கடை கணேசா வித்தியாலயத்தின் அதிபர் கந்தையா பேரானந்தம் அவர்கள் தனது 35 வருட கல்விச்சேவையில் இருந்து அண்மையில் ஓய்வு பெற்றுள்ளார்.
இவர் அன்னமலையினைப் பிறப்பிடமாகவும் வதிவிடமாகவும் கொண்டதுடன் கந்தையா பகவதி அவர்களின் புதல்வருமாவார் தனது ஆரம்பக்கல்வியினை நாவிதன்வெளி அன்னமலை மகாவித்தியாலயத்தில் கற்றதுடன் இடைநிலைக்கல்வியினை மட்ஃ ஏறாவூர் தமிழ் மகாவித்தியாலயத்திலும் உயர்தரத்தினை கல்முனை உவெஸ்லி உயர்தரப்பாடசாலையிலும் கற்று 1988.08.07 ஆம் திகதி ஆரம்பக்கல்வி ஆசிரியராக சது ஃகணேசாவித்தியாலயத்தில் நியமனம்பெற்றுள்ளார்.
பின்னர் கொட்டகலை ஆசிரிய கலாசாலையில் பயிற்சிபெற்றுள்ளதுடன் கல்வி மானிபட்டதாரியும் ஆவார்
பின்னர் விவேகானந்தா மகாவித்தியாலயம், அன்னமலை சிறிசக்திவித்தியாலயம் ஆகியவற்றில் கடமையாற்றி பின்னர் இலங்கை அதிபர் சேவை 2 இற்குத் 2012.01.26 தெரிவாகியதுடன் சம்மாந்துறை கல்விவலயத்தில் ஆரம்பக்கல்விக்கான ஆசிரிய ஆலோசகராக சிலகாலம் சேவையாற்றியதுடன் அதன்பின்னர் 15 ஆம் கிராமம் விவேகானந்தா மகாவித்தியாலயத்தில் 2014.06.23 அன்று அதிபராக நியமிக்கப்பட்டு 5 வருடங்கள் அதிபராகச் சேவையாற்றி 2019.05.03 அன்று பிரதி அதிபராக வேப்பையடி கலைமகள் மகாவித்தியாலயத்திற்கு இடமாற்றம் பெற்று சேவையாற்றியதுடன் 2022.07.05 சவளக்கடை கணேசாவித்தியாலயத்திற்கு அதிபராக நியமிக்கப்பட்டு அதிபர் தரம் 1 இல் கடமையாற்றி தனது 60 வது வயதில் ஓய்வுபெற்றுள்ளார்

Related posts