அபிவிருத்திக்காக பல லெட்சம் ரூபாய் நிதியினை கோரியுள்ளதாகவும் அவை கிடைக்கப் பெற்றதும் அதற்கான வேலைகளும் ஆரம்பிக்கப்படும்

களுவாஞ்சிகுடி பொதுச்சந்தை அபிவிருத்திக்காக பல லெட்சம் ரூபாய் நிதியினை கோரியுள்ளதாகவும் அவை கிடைக்கப் பெற்றதும் அதற்கான வேலைகளும் ஆரம்பிக்கப்படும் என பிரதேச சபை தவிசாளர் ஞா.யோகநாதன் தெரிவித்தார்.
மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபைக்கு உட்பட்ட களுவாஞ்சிகுடி  பொதுச் சந்iதையில் பைசிக்கில்  பாதுகாப்பு நிலையம் ஒன்றினை அமைக்க வேண்டும் என்ற நீண்ட நாட்களாக விடுக்கப்பட்ட  மக்களின் கோரிக்கைகளுக்கு அமைய பிரதேச சபையால் பத்து இலட்சம் ரூபா நிதி ஓதுக்கப்பட்டு வேலைகள் ஆரம்பிக்கப்பட்ட நிலையில் கமநல அமைப்பானது குளத்தை அண்மித்ததாக அமைக்கப்படுகின்றமைக்கு தங்களது எதிர்ப்பினை வெளியிட்ட நிலையில் குறித்த வேலையானது இழுபறி நிலையில் காணப்பட்டு வந்ததுடன் நிதியானது திரும்பி செல்லும் நிலையானது தோன்றியிருந்தது இதனையடுத்து இது தொடரப்பில் பிரதேச சபை தவிசாளரும், செயலாளரும் தங்களது ஆதங்கத்தை ஊடகங்கள் வாயிலாக வெளியிட்டு இருந்தனர். கமநல அமைப்பானது தங்களது அதரவினை வழங்கியமைக்கு பிரதேச சபை தவிசாளரும் பிரதேச சபை செயலாளரும் தங்களது மனமார்ந்த நன்றிகளை தெரவித்தனர் இதன் போதே தவிசாளர் இவ்வாறு தெரவித்தார்.
அவர் தொடரந்து கருத்து தெரிவிக்கையில்
நாங்கள் களுவாஞ்சிகுடி பொதுச் சந்தையின் அபிவிருத்திக்காக பலலெட்சம் ரூபாய் செலவு செய்துள்ளோம். அதுமாத்திரமின்றி தற்போது எதிர்காலத்தில் குறித்த பொதுச் சந்தையின் குறைபாடுகளை நிவர்த்தி செய்யும் முகமாக நாங்கள் பலதரப்பட்ட நடவடிக்கைகளை எடுத்துவருகின்றோம் அந்தவகையில் இருபது மில்லியன் ரூபாய் நிதியினை கோரி உள்ளுராட்சி அமைச்சிடம் கோரியுள்ளோம்.  அவை கிடைக்கப் பெற்றதும் அதற்கான வேலைகளும் ஆரம்பிக்கப்படும் எனவும் இதற்காக அனைவரும் தங்களது ஒத்துழைப்பை வழங்க வேண்டும் எனவும் இதன்போது மேலும் தெரிவித்தனர்

Related posts