அம்பாரை மாவட்டம் அக்கரைப்பற்று கோளாவில்-02 வளர்பிறை கிராமிய மீன் பிடிச்சங்கத்திற்கான மீன்பிடி உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு கோளாவில் தியாயப்பர் பாலாத்தை மைதானத்தில் நடைபெற்றது.
தேசிய சகவாழ்வு சமூக நல்லிணக்க அரச கரும மொழிகள் அமைச்சர் மனோகணேசனின் 15 இலட்சம் ரூபா நிதி ஒதுக்கீட்டில் பெற்றுக்கொடுக்கப்பட்ட 20 தோணிகள் மற்றும் 20 துவிச்சக்கரவண்டிகள் உள்ளிட்ட மீன்பிடி உபகரணங்கள் இங்கு வழங்கி வைக்கப்பட்டன.
அமைச்சின் அம்பாரை மாவட்ட இணைப்பாளர் ரி.ஜெயாகர் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் அமைச்சின் தேசிய இணைப்பாளர் விநாயகமூர்த்தி ஜனகன் கலந்து கொண்டு மீன்பிடி வாழ்வாதார பொருட்களை கையளித்தார்.
நிகழ்வில் ஜனநாயக மக்கள் முன்னணியின் பிரச்சார செயலாளர் மு.பரணிதரன் உள்ளிட்ட பல உள்ளுர் அரசியல் தலைவர்களும் ஆலயங்களின் அறங்காவலர்கள் சமூக அமைப்புக்களின் பிரதிநிதிகள் என பலரும் கலந்து கொண்டனர்.
கலந்து கொள்ள வருகை தந்த அதிதிகளுக்கு நர்த்தனாலயா மாணவர்களின் நடன குழுவினரும் பிரதேச மக்களும் இணைந்து வரவேற்பளித்தனர்.
தொடர்ந்து மைதானத்தில் அமைக்கப்பட்ட மேடையில் இடம்பெற்ற கலை நிகழ்ச்சிகளையும் கண்டுகளித்தனர்.
நிறைவாக வளர்பிறை மீன் பிடிச்சங்கத்திற்கான மீன்பிடி உபகரணங்களையும் வழங்கிவைத்தனர்.