அரசியல் அதிகாரங்களும் பதவிகளும் நம்மை விட்டுச் செல்லும்  வேளையில் அருகிலிருந்த அனைவருமே தூரச் செல்லும்போது நன்றியுடன் வரவேற்பது வீட்டில் வளர்க்கப்படும் வளர்ப்பு நாய் மட்டுமே.

அரசியல் அதிகாரங்களும் பதவிகளும் நம்மை விட்டுச் செல்லும்  வேளையில் அருகிலிருந்த அனைவருமே தூரச் செல்லும்போது நன்றியுடன் வரவேற்பது வீட்டில் வளர்க்கப்படும் வளர்ப்பு நாய் மட்டுமே.
 
இவ்வாறு பல்நோக்கு அபிவிருத்தி செயலணி திணைக்களத்தின் வழிகாட்டுதலின் கீழ் ஒழுங்கு செய்யப்பட்டிருந்த  யானை வேலி பராமரிப்பு  வேலைத்திட்டத்தின் ஆரம்ப நிகழ்வு மற்றும் தேசிய பயிலுனர் மற்றும் கைத்தொழில் பயிற்சி அதிகார சபையினால் வழங்கப்படும் பயிற்சி திட்டத்தினை  அம்பாறை உகன பிரதேச செயலகத்தில் ஆரம்பித்து வைத்து உரையாற்றிய . வனவிலங்கு பாதுகாப்பு, யானை வேலிகள் மற்றும் அகழிகள், பாதுகாப்பு  மற்றும் வன வளங்கள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் விமலவீர திஸாநாயக்க தெரிவித்தார்.
 
அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில் ,
 
சமயங்களும் மதங்களும் உலகில் வாழும் மக்கள் அனைவரையுமே நல் வழிப்படுத்துவதற்காகவே உருவாக்கப்பட்டன.
அதற்காக ஒரு இனத்தை இன்னுமொரு இனம் சந்தேகக் கண் கொண்டு பார்ப்பதனையும் , அதனை ஒரு பொருட்டாக வைத்துக் கொண்டு ஏனைய இன மக்களை புண்படுத்தும் வகையில் நடந்து கொள்வதும் வெறுக்கத்தக்க ஒரு விடயமாகும்.
 
அரசியல் அதிகாரங்களும் பதவிகளும் எம்மிடம் இருக்கும்போது உற்றார் உறவினர் நண்பர்கள் மற்றும் ஏனைய பல தரப்பினர் நம்முடன் இணைந்து கொண்டிருப்பார்கள்.  ஏதோ ஒரு எதிர்பார்ப்புடன் தான் அவர்கள் செயற்பட்டுள்ளார்கள் என்பதனை எம்மிடமிருந்து அப் பதவி விலகிச் செல்லும் போது உணரலாம்.ஆனால் வீடு செல்லும் போது நம்மை அன்புடன் வரவேற்பது வீட்டில் அன்புடன் வளர்த்து வந்த வளர்ப்பு நாய் மட்டுமே.அதற்குள்ள நனறியுணர்வு மனிதனிடம் இல்லாமல் போனது மிகவும் வருந்தத்தக்க விடயமாகும.
 
எமது நாட்டைப் பொறுத்த வரையில் யானைகளின் எண்ணிக்கை படிப்படியாக குறைந்து வருகின்றது. யானைக்கும் மனிதனுக்கும் இடையிலான போர் நாளுக்கு நாள் கூடிக்கொண்டே செல்கின்றது. காட்டின் எல்லைப்புறத்தில் வாழும் மக்கள் தினசரி பல பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்க வேண்டியுள்ளது. அதற்காக காட்டிலுள்ள யானைகளை அழித்து விட முடியாது. மக்களுக்கும் யானைகளிடமிருந்து பாதுகாப்பு வழங்க வேண்டிய பாரிய பொறுப்பும் எம்மிடமே உள்ளது.
யானைகள் ஊருக்குள் வருவதற்கு முக்கிய காரணமாக அமைவது ஆயந்தோய்ந்து பாராத சுயநலமான மனித நடவடிக்கைகளாகும். வீடுகள் அமைப்பதற்கும் சேனைப்பயிர் செய்வதற்கும் ஆயிரக் கணக்கான காடுகள் சட்டவிரோதமாக தினசரி அழிக்கப்பட்டுள்ளன. காட்டிலுள்ள பெறுமதியான மரங்கள் சட்டவிரோதமாக வெட்டப்படுகின்றன. காட்டு விலங்குகள் சுதந்திரமாக வாழும் காடுகள் நாளுக்கு நாள் அழிக்கப்படுவதனால் காட்டில் வாழும் யானை போன்ற விலங்குகள் நாட்டுக்குள் வருவதனை எவராவும் தடுக்க முடியாது. எனவே எம்மால் முடிந்தவரை யானை வேலி அமைக்கப்படுவதனால் இதனை ஓரளவு கட்டுப்படுத்தலாம் . இதற்கு பொதுமக்களின் ஒத்துழைப்பும் மிக அவசியமாக தேவைப்படுகின்றது.என்று தெரிவித்தார்.

Related posts