இடைக்கால கணக்கறிக்கை நிறைவேறியது

2019 ஆம் ஆண்டு முதல் காலாண்டுக்கான செலவீனங்களுக்காக சமர்ப்பிக்கப்பட்ட 1,765 பில்லியன் ரூபாய்க்கான, இடைக்கால கணக்கறிக்கை 102 வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது.


இந்த கணக்கறிக்கை மீதான வாக்கெடுப்பு இலத்திரனியல் முறைமையில் நடத்தப்பட்டது.

இலத்திரனியல் முறைமையின் கீழ் வாக்களிக்க முடியாத சிலர் பெயர் குறிப்பிடப்பட்டு வாக்களிப்பில் கலந்துகொண்டனர்.

இந்த கணக்கறிக்கையின் மீது வாக்கெடுப்பு நடத்தப்படவேண்டுமென ஜே.வி.பி கோரியிருந்தது.

அதன்படி ஆதரவாக,102 வாக்குகளும், எதிராக 6 வாக்களும் கிடைத்தன. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆதரவாக வாக்களித்தது. மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான அணியினர் வாக்கெடுப்பின் போது, சபையில் பிரசன்னமாய் இருக்கவில்லை 

Related posts