இந்நாட்டில் இடம்பெறும் எந்தவொரு அனர்த்தத்திலிருந்தும் எம்மக்களை பாதுகாப்பதற்கும், அவர்களை மீட்டெடுப்பதற்கும் இலங்கை அரசாங்கம் தயாரவுள்ளது

இந்நாட்டில் இடம்பெறும் எந்தவொரு  அனர்த்தத்திலிருந்தும்  எம்மக்களை  பாதுகாப்பதற்கும், அவர்களை மீட்டெடுப்பதற்கும் இலங்கை அரசாங்கம் தயாரவுள்ளது என
மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக்குழுவின் இணை தலைவரும் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான சிவநேசதுரை சந்திரகாந்தன்
தெரிவித்தார்.
சுனாமியின் அகோர தாக்கம் ஏற்பட்டு 16ஆண்டுகள் நினைவு தினம் மட்டக்களப்பு மாவட்டத்தில் முன்னெடுக்கப்பட்டுவரும் நிலையில் ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வு நேற்று காலை(26)நடைபெற்றது.
கல்லடி கடல்மீன் விளையாட்டுக்கழகத்தின் ஏற்பாட்டில் கல்லடி பாலம் அருகில் சுனாமி நினைவு நிகழ்வும் மாணவர்கள் கௌரவிப்பும் நடைபெற்றது.

கல்லடி பாலத்திற்கு அருகில் உள்ள சுனாமி நினைவுத்தூபியில் சுனாமியில் உயிர்நீர்த்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டதை தொடர்ந்து கௌரவிப்பு நிகழ்வு நிகழ்வு நடைபெற்றது.

இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக்குழுவின் இணை தலைவரும் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் கலந்துகொண்டார்.

இதன்போது உயிர்நீர்த்தவர்களுக்கு சுடர் ஏற்றப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டதை தொடர்ந்து மாணவர்கள் கௌரவிப்பு நிகழ்வு நடைபெற்றது.

ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சையில் அகில இலங்கை ரீதியில் தமிழ் மொழியில் சாதனை படைத்த வின்சன்ட் பெண்கள் உயர் பாடசாலையின் மாணவி சிறிசங்கர் பவிநயா உட்பட 30க்கும் மேற்பட்ட மாணவர்கள் இதன்போது கௌரவிக்கப்பட்டதுடன் அவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் மற்றும் கல்விக்கான உதவிகளும் வழங்கப்பட்டன.

பிரதம அதிதியாக மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக்குழுவின் இணை தலைவரும் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்…

எமது மக்களுக்கு எந்த நிவாரணமும் வழங்கத் தேவையில்லை.அவர்களை ஊக்கப்படுத்தி,நம்பிக்கையூட்டி உழைத்து வாழ்வதற்கு நம்பிக்கையூட்டினால் அவர்கள் தாமாகவே உழைத்து வாழ்வார்கள்.அனர்த்தம் என்பது தானாகவே ஏற்படுத்துவதல்ல.அனர்த்தமானது இறைவனால் இப்பூமியில் இயற்கையாக ஏற்படுகின்றது.எந்தவொரு அனர்த்தத்தையும் மக்கள் மனத்தைரியத்துடன் எதிர்கொள்ளவேண்டும்.எம்மக்கள் எதிர்கொள்ளும் அனர்த்தத்திலிருந்து எம்மக்களை  பாதுகாப்பதற்கும், மீட்டெடுப்பதற்கும் இலங்கை அரசாங்கம் தயாரவுள்ளது.

சுனாமி,வெள்ளம் உள்ளிட்ட பல்வேறு அனர்த்தங்களை நாட்டுமக்கள்  படிப்பினையாக கொண்டு  எந்தவொரு அனர்த்தத்திற்கும் முகம்கொடுத்து அதன்மூலம் பெற்றுக்கொண்ட  ஆற்றலையும்,மனவலிமையையும் வைத்து இன்று மக்கள் சுயமாக உழைத்து வாழ்வதற்குரிய நம்பிக்கை பிறந்துள்ளது எனத் தெரிவித்தார்.

Related posts