இனமத அரசியல் முரண்பாடுகளை களையும்சக்தி கலைகளுக்கேஉண்டு.குறும்படபயிற்சிப்பட்டறைநிறைவுவிழாவில் பிரதேசசெயலாளர் அதிசயராஜ்

இந்தியாவில் 132கோடிக்குமேல் பல்லின பல்மொழி பல்கலாசார இனக்குழுமங்களிருந்தும் அந்தநாடு ஒற்றுமையாக இருப்பதற்குக்காரணம் கலைகள். அந்தக்கலைகள்தான் அவர்களை ஒன்றாக கட்டிப்போட்டிருக்கின்றன.அதேபோல இலங்கையிலுமுள்ள இனமதமுரண்பாடுகளை கலைகளைக்கொண்டுதான் களையவேண்டும்.
 
இவ்வாறு கல்முனை வடக்கு பிரதேச செயலாளர் ரி.ஜே.அதிசயராஜ் தெரிவித்தார்.
 
கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களம்  ஏற்பாடு செய்த குறும்படத்தயாரிப்பாளர்கள் மற்றும் கலைஞர்களின் வாண்மைவிருத்தியை மேம்படுத்தும்பொருட்டு இரண்டுநாள் பயிலரங்கின் இறுதிநாளான நேற்று பிரதமஅதிதியாகக்கலந்துகொண்ட அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
 
அம்பாறைமாவட்டத்தின் முதலாவது பயிலரங்கு காரைதீவு விபுலாநந்த கலாசார மண்டபத்தில் புதன் வியாழன் தினங்களில் பணிப்பாளர் சரா.நவநீதன் தலைமையில் நடைபெற்றது.
 
வளவாளர்களாக கிழக்கு மாகான கல்வி அமைச்சின் பொறியியலாளர் கௌரிபாலன்  பிரபலஎழுத்தாளர்  உமா வரதராஜன்தென்இந்திய சினிமா தயாரிப்பாளர் வெற்றிமாறனின் உதவி தயாரிப்பாளர் ஆடுகளம் திரைப்பட புகழ் ஹஸீன் குறும்பட தயாரிப்பாளர் ஜானதாஸ் காசிநாதர் ஆறாம்நிலம் படத் தயாரிப்பாளர் ஈழத்தின் முக்கிய திரைக்கலைஞர்  ஆனந்த ரமணண் ஆகியோர்  கலந்து பட்டறையை வளப்படுத்தினர்.
 
அங்கு அவர் மேலும் பேசுகையில்:
கலைகள் மக்களை கட்டிப்போடக்கூடியன. ஒற்றுமையை ஏற்படுத்தக்கூடியன. இல்லாவிட்டால் 132கோடி மக்களுடைய இந்தியா இன்று 1000துண்டுகளாகப்பிரிந்திருக்கும்.
எனவே நாமும் இந்த சின்னஞ்சிறிய அழகிய நாட்டில் ஒற்றுமையாக சமாதானமாக வாழவேண்டுமெனின் இத்தகைய கலைப்பயணத்தைத்தொடரவேண்டும். கிழக்குமாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களம் பணிப்பாளர் நவநீதன் வந்தபிற்பாடுதான் இன்று களைகட்டிவருகிறது.-அவiயும் குழாத்தினரையும் பாராட்டுகிறேன்.
 
இன்று அவசரமான உலகம். கிரிக்கட் கூட 20க்கு20 தொடரை மறந்து 1மணிநேரத்துள் எப்படி போட்டியை நடாத்தலாம் என்பதையிட்டு சிந்தித்துவருகிறார்கள்.மக்களுக்கு நேரமில்லை. எனவே 3மணிநேரம் குந்தியிருந்து படம் பார்த்தகாலம் மலையேறிவிட்டது. இப்படியான குநற்திரைப்படங்கள்தான் எதிர்காலத்தில் களைகட்டும்.எனவே இப்படியான பயிற்சிபெறுபவர்கள் சர்வதேச தரம்வாய்ந்த குறும்படங்களைத்தயாரிக்கவேண்டும். என்றார்.
 
நிகழ்வின் இறுதியில் சான்றிதழ்கள் பங்குபற்றுனர்களுக்கு வழங்கப்பட்டன . பயிற்சிப்பட்டறையை மாகாண கலாசார உத்தியோகத்தர் குணபாலா நெறிப்படுத்த காரைதீவு கலாசார உத்தியோகத்தர் மு.சதாகரன் நன்றியுரை நிகழ்த்தினார்.

Related posts