இராஜாங்க அமைச்சர் சந்திரகாந்தன் தலைமையில் சட்டவிரோத மீன்பிடியை தடுக்கும் நோக்கில் கலந்துரையாடல்!!

சட்டவிரோத மீன்பிடியை தடுக்கும் நோக்கில் இராஜாங்க அமைச்சரும் மாவட்ட ஒருங்கிணைப்பு குழு தலைவருமாகிய சிவ.சந்திரகாந்தன் தலைமையில் மட்டக்களப்பில் விசேட கலந்துரையாடலொன்று இடம்பெற்றது.

மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி கலாமதி பத்மராஜா அவர்களது ஏற்பாட்டில் இன்று (12) திகதி காலை மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற விசேட  கலந்துரையாடலில்  மட்டக்களப்பு மாவட்ட கடற்றொழில் நீரியல்வள திணைக்கள உதவிப் பணிப்பாளர் ருக்சான் குருஸ், கடற்படை அதிகாரிகள், மேலதிக அரசாங்க அதிபர் திருமதி சுதர்சனி ஸ்ரீகாந்த், மாவட்ட ஒருங்கிணைப்பு குழு தலைவரின் தனிப்பட்ட செயலாளர் த.தஜீவரன், வெடிபொருள் திணைக்கள அதிகாரி, மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் திருமதி சசிகலா புண்ணியமூர்த்தி, மாவட்ட செயலக பிரதித் திட்டமிடல் பணிப்பாளர்கள் மற்றும் துறைசார் திணைக்கள அதிகாரிகள் என பலரும் கலந்துகொண்டிருந்தனர்.

இக்கலந்துரையாடலின் போது வெளிநாட்டுகளில், வெளி மாவட்டங்களில் இருந்து வருகைதரும் சட்டவிரோத மீன்பிடியாளர்களை தடுப்பது தொடர்பாகவும், சட்டவிரோத மீன்பிடியை தடுப்பதற்கு மேற்கொள்ள வேண்டிய நடைமுறைகள் தொடர்பாகவும் இதன்போது விரிவாக கலந்துரையாடப்பட்டது. அத்தோடு சட்டவிரோத மீன் பிடி நடவடிக்கைகளில் ஈடுபடுவோரை தடுப்பதற்கான ஆலோசனைகளை துறைசார் அதிகாரிகளுக்கு  இராஜாங்க அமைச்சர் சிவ.சந்திரகாந்தனினால் இதன்போது வழங்கியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

 
 

Related posts