இறந்து கரையொதுங்கும் கடலாமைகள் டொல்பின்கள்.மக்கள் பீதி:கடலுணவுகள் தவிர்ப்பு;உடற்கூற்றுப்பபரிசோதனைகள் நடாத்த நடவடிக்கை.

கிழக்கு மாகாணத்தின் பல பாகங்களிலும் கடற்கரைப்பிரதேசங்களில் பரவலாக இறந்த கடலாமைகள் டொல்பின்கள் மீன்கள் கரையொதுங்கிவருகின்றன.
அவற்றுக்கு உடற்கூற்றுப்பரிசோதனைகள் மேற்கொள்ளப்படவிருக்கின்றன. அதன் முடிவுகள் நீதிமன்றுக்கு சமர்ப்பிக்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
 
அம்பாறை மாவட்டத்தில் கல்முனை  காரைதீவு பெரிய நீலாவணை பிரதேச கடல் மற்றும் பாண்டிருப்பு திருக்கோவில் பிரதேச கடலில்  கடலாமைகள்  மற்றும் மீன்கள் கரை ஒதுங்கியுள்ளன.

அண்மையில் கொழும்புக்கடலில் இடம்பெற்ற எக்ஸ்பிரஸ்பேர்ள் கப்பல் தீப்பற்றலினால் ஏற்பட்ட எண்ணெய் கசிவு காரணமாகவே நாட்டின் பல இடங்களில் இவ்வாறு கடல் உயிரினங்கள் இறந்த நிலையில் கரையொதுங்கி வருவதாகக்கூறப்படுகிறது. இதுமக்கள் மத்தியில் ஒருவித அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.அவர்கள்  கடல்மீன்களை தவிர்த்துவருகின்றனர்.

இதேவேளை மட்டக்களப்பு திருகோணமலை மாவட்டத்தின் கடற்கரைகளை அண்டிய பகுதிகளிலும்  உயிரிழந்த நிலையில் ஆமைகள்டொல்பின் மீன்கள் கரையொதுங்கி வருகின்றன.
 
 மட்டக்களப்பு மாவட்டத்தில் கடற்கரைகளை அண்டிய பகுதிகளில் உயிரிழந்து கரையொதுங்கும் ஆமைகள், டொல்பின் மீன்களை அம்பாறை வனஜீவராசிகள் மிருக வைத்திய பிரிவிற்கு அனுப்பி உடற்கூற்று பரிசோதனைகள் மேற்கொள்ளப்படவுள்ளது.மேலும் குறித்த உடற்கூற்று அறிக்கை தொடர்பாக மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்துக்கு அறிக்கை சமர்பிக்கப்படவுள்ளதாக பிராந்திய சுற்றுவட்ட உத்தியோகத்தர் நாகராசா சுரேஸ்குமார் தெரிவித்துள்ளார்.
 
 கிரான்குளம்தாழங்குடாபுதுக்குடியிருப்பு ஆகிய பகுதிகளில் இந்த உயிரினங்கள் கரையொங்கி வருகின்றன. கிரான்குளம் பகுதியில் மூன்று ஆமைகளும் ,ஒரு டொல்பின் மீனும் கரையொதுங்கியுள்ள நிலையில் தாழங்குடா பகுதியில் ஐந்தரை அடி நீளமான டொல்பின் மீனொன்று உயிரிழந்த நிலையில் கரையொதுங்கியுள்ளது.

கடற்றொழில் நீரியல்வள திணைக்கள அதிகாரிகள் கடல் சுழல் பாதுகாப்பு அதிகாரசபையின் உத்தியோகத்தர்கள்இமத்திய சுற்றாடல் அதிகார சபையின் உத்தியோகத்தர்கள் உட்பட்ட அதிகாரிகள் பார்வையிட்டதுடன்இஇறந்த நிலையில் பலத்த காயங்களுடன் கரையொதுங்கிய டொல்பின் உள்ளிட்ட கடலாமைகளை மட்டக்களப்பு மாவட்ட வனஜீவராசிகள் திணைக்களத்தின் பிராந்திய சுற்றுவட்ட உத்தியோகத்தர் நாகராசா சுரேஸ்குமார் பார்வையிட்டதுடன், பகுப்பாய்விற்காக எடுத்துச் சென்றுள்ளனர்.

கடந்த 21 ஆம் திகதி பேர்ள் கப்பல் தீ பரவியதிலிருந்து இதுவரை 40 இற்கும் மேற்பட்ட கடலாமைகளின் உடல்களும் 05 டொல்ஃபின்களின் உடல்களும் இலங்கையின் பல்வேறு பகுதிகளிலும் கரையொதுங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts