இலங்கையின் கிழக்கே நிலைகொண்ட நிவர் புயல் சென்னையிலிருந்து (Chennai) தெற்கு- தென் கிழக்காக 350 கிலோமீற்றர் தூரத்திலும் மையம் கொண்டுள்ளது.

இலங்கையின் கிழக்கே நிலைகொண்ட நிவர் புயல்
சென்னையிலிருந்து (Chennai) தெற்கு- தென் கிழக்காக 350 கிலோமீற்றர் தூரத்திலும் மையம் கொண்டுள்ளது என மட்டக்களப்பு மாவட்ட வானிலை அவதான நிலையத்தின் பணிப்பாளர் எஸ்.சூரியகுமாரன் இன்று(25)  தெரிவித்தார்.
இன்றையதினம் (25.11.2020) காலை 05.30 மணிக்கு செய்யப்பட்ட வானிலை பகுப்பாய்வின் படி தென் மேற்கு வங்காள விரிகுடா கடற் பிராந்தியத்தில் காணப்பட்ட தீவிர புயல் (Severe Cyclonic Storm) ஆனது கடந்த 06 மணித்தியாலங்களில் மணிக்கு 07 கிலோ  மீற்றர் வேகத்தில் மேற்கு- வடமேற்கு திசையில் நகர்ந்து தற்போது காங்கேசன்துறையிலிருந்து கிழக்காக 220 கிலோமீ ற்றர் தூரத்திலும்,கூடலூரில் (Cuddalore) இருந்து கிழக்கு- தென்கிழக்காக 290 கிலோமீற்றர் தூரத்திலும்,
புதுச்சேரியிலிருந்து (Puducherry) கிழக்கு- தென்கிழக்காக 300 கிலோ மீற்றர் தூரத்திலும்,சென்னையிலிருந்து (Chennai) தெற்கு- தென் கிழக்காக 350 கிலோமீற்றர் தூரத்திலும் மையம் கொண்டுள்ளது என மட்டக்களப்பு மாவட்ட வானிலை அவதான நிலையத்தின் பணிப்பாளர் எஸ்.சூரியகுமாரன் இன்று(25) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் இவ்வாறு  தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்…
இது அடுத்து வரும் 12 மணித்தியாலங்களில் அதி தீவிர புயலாக (Very Severe Cyclonic Storm) மாறும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இது பின்னர் வடமேற்கு திசையில் நகர்ந்து தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பிரதேசங்களுக்கு இடையில் காரைக்கால் (Karaikal) பிரதேசத்திற்கும்,மாமல்லபுரம் (Mamallapuram) பிரதேசத்திற்கும் இடையில் இன்று இரவு ஊடறுக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இந்த சந்தர்ப்பத்தில் புயல் காற்றின் வேகமானது மணிக்கு 120 கிலோமீற்றர் முதல் 130 கிலோ மீற்றர் வரை வீசும் என எதிர்பார்க்கப் படுவதுடன், இந்த காற்றின் வேகமானது மணிக்கு 145 வரை அதிகரிக்க கூடும்.

அதேவேளை கொழும்பு வளிமண்டலவியல் ஆராய்ச்சித் திணைக்களத்தினால் இன்று காலை 05.30 மணிக்கு வெளியிடப்பட்ட வானிலை முன்னறிவிப் பில் பின்வருமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது:-

இந்த சூறாவளி புயல் காரணமாக இலங்கையின் வடக்கு, கிழக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களின் சில பகுதிகளில் காற்றின் வேகமானது மணிக்கு 60 கிலோமீற்றர் முதல் 80 கிலோமீற்றர் வரை வீசுவதுடன், ஏனைய பிரதேசங்களில் மணிக்கு 40 கிலோமீற்றர் முதல் 50 கிலோமீற்றர் வரை வீசும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

அத்துடன் வடக்கு, வடமத்திய, வடமேற்கு மற்றும் மேற்கு மாகாணங்கள் மேக மூட்டமாக காணப்படும்.வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களில் மாகாணங்களின் சில பகுதிகளிலும் புத்தளம் மாவட்டத்தின் சில பகுதிகளிலும் மழை அல்லது இடியுடன் கூடிய மழை காண காணப்படுவதுடன், சில பிரதேசங்களில் 75 மில்லிமீற்றர் மழைக்கும் அதிகமான மழை வீழ்ச்சி பதிவு செய்யப்படும் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது.

ஊவா மாகாணத்தின் சில பகுதிகளில் பிற்பகல் 02.00 மணிக்கு பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை காணப்படும்.கடல் பிராந்தியங்களை பொறுத்தவரையில், புத்தளம் முதல் மன்னார், காங்கேசன்துறை, திருகோணமலை, மட்டக்களப்பு ஊடான பொத்துவில் வரையான கடல் பிராந்தியங்களில் கா ற்றின் வேகமானது மணிக்கு 80 கிலோமீற்றர் முதல் 100 கிலோமீ ற்றர் வரை வடமேற்கு முதல் தென்மேற்கு வரையான திசையிலிருந்து காற்று வீசும்.

எனவே மேற்குறிப்பிடப்பட்ட கடல் பிராந்தியங்கள் மிகவும் கொந்தளிப்பாக காணப்படும். எனவே மீனவர் சமூகம் மற்றும் கடல் சார் தொழிலாளர்கள் தமது கடல் நடவடிக்கையின்போது துணிகர செயல் எதிலும் ஈடுபடவேண்டாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts