இலங்கையில் உள்ள தேசிய பெரும்பான்மையினக் கட்சிகள் அனைத்தும் தீர்வுத் திட்டம் என்ற போர்வையில் தமிழர்களின் பலத்தை உடைப்பதற்கான மூலோபாயங்களைப்பற்றி சிந்திக்கின்றார்கள் பா.உ கவீந்திரன் கோடீஸ்வரன்

இலங்கையில் உள்ள தேசிய பெரும்பான்மையினக் கட்சிகள் அனைத்தும் தீர்வுத்திட்டம் என்ற போர்வையில் தமிழர்களின் பலத்தை உடைப்பதற்கான மூலோபாயங்களைப்பற்றி சிந்திக்கின்றார்கள் என அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன் தெரிவித்தார்.

மாணவ மீட்பு பேரவையின் மாணவகள் ஊக்குவிப்பு விழா நேற்று மாலை புதன்கிழமை கல்முனை குருந்தையடி மாடிவீட்டுத்திட்டத்தில் பேரவையின் தலைவரும், பொறியியலாளருமான கலாநிதி எஸ்.கணேசானந்தம் தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்விற்கு பிரதம அதிதியாக அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் க.கோடீஸ்வரன் சிறப்பு அதிதிகளாக கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் ஆர்.முரளீஸ்வரன், கல்முனை மாநகரசபை பிரதம பொறியியலாளர் எஸ்.சர்வானந்தா மற்றும் விசேட அதிதிகள், பெற்றோர்கள், வங்கிப்புத்தகங்களை பெறும் பாடசாலை மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

இதன் போது உரையாற்றுகையிலேயே அம்பாறை மாவட்ட பா.உ கவீந்திரன் கோடீஸ்வரன் இவ்வாறு தெரிவித்திருந்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்

தமிழ் மக்களின் சக்தியாக தமிழ்த் தேசிய கூட்டமைப்பினரே உரிமையுடன் செயற்படுகின்றனர் ஆனால் அவர்களை குழப்புவதற்காகவே வேறு சில சக்திகள் மறைமுகமாக செயற்படுகின்றனர்.

ஆனால் இலங்கையில் உள்ள தேசிய பெரும்பான்மையினக் கட்சிகள் அனைத்தும் தீர்வுத்திட்டம் என்ற போர்வையில் தமிழர்களின் பலத்தை உடைப்பதற்கான மூலோபாயங்களைப்பற்றி சிந்திக்கின்றார்கள் என தனதுரையில் தெரிவித்திருந்தார்.

Related posts