இலங்கை ஆசிரியர் சங்கத்தின் ஏற்பாட்டில் தொற்று நீக்கிகள் வழங்கிவைப்பு.

இலங்கை ஆசிரியர் சங்கத்தின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்தில் உள்ளதெரிவுசெய்யப்பட்ட பாடசாலைகளுக்குகிருமித் தொற்று நீக்கிகள் வழங்கிவைப்பு.        

              ROTARY CLUB OF COLOMBO MIDCITYயின் அனுசரணையில் இலங்கை ஆசிரியர் சங்கத்தின் ஏற்பாட்டில் புதன்கிழமை (24) மட்டக்களப்பு மேற்கு மண்முனை தென்மேற்கு கோட்டக்கல்வி அதிகாரி திரு யூ.உதயகுமாரன் தலைமையில் மண்முனை தென்மேற்கு கோட்டக்கல்வி அலுவலகத்திற்கு உட்பட்ட  21 பாடசாலைகளுக்கு சுமார் இரண்டு லட்சம் ரூபாய்பெறுமதியான கிருமிதொற்று நீக்கிகள் மண் முனைதென்மேற்கு கோட்டக்கல்வி அதிகாரி அலுவலகத்தில்வழங்கிவைக்கப்பட்டது .

இதில் இலங்கை ஆசிரியர் சங்கத்தின் கிழக்குமாகாண இணைப்பாளரும் மட்டக்களப்பு மாவட்ட செயலாளருமாகிய பொன்னுத்துரை உதயரூபன் அவர்கள்கலந்து கொண்டதுடன் மண் முனைதென்மேற்குகோட்டக்கல்வி அலுவலகத்திற்குரிய தெரிவு செய்யப்பட்டபாடசாலைகளுக்கு  தொற்றுநீக்கிகள் அடங்கிய பொதியும் வழங்கி வைக்கப்பட்டது மேலும் மட்டக்களப்பு மேற்கு வலயமண்முனை மேற்கு கோட்டக்கல்வி அலுவலகத்திற்கு உட்பட்ட 30 பாடசாலைகளுக்கு 4 லட்சம் ரூபாய் பெறுமதியான கிருமித் தொற்று நீக்கிகள் வழங்கிவைக்கப்பட்டுள்ளதுடன் கல்குடா கல்வி வலயத்தில் உள்ள தெரிவு செய்யப்பட்ட பாடசாலைகளுக்கு 2 லட்சம் பெறுமதியான தொற்று நீக்கிகள் வழங்கப்பட்டுள்ளது ,மட்டக்களப்புமேற்குகல்வி வலய ஏறாவூர் பற்று கோட்டத்தில் உள்ள தெரிவுசெய்யப்பட்ட பாடசாலைகளுக்கு 2 லட்சம் பெறுமதியானகிருமித் தொற்று நீக்கிகள் வழங்கிவைக்கப்படவுள்ளமையும் குறிப்பிடத்தக்கதாகும்

Related posts