உள்நாட்டில் மருந்து தயாரிப்புக்காக 46 முதலீட்டாளர்களுடன் ஒப்பந்தம்

இலங்கைக்கு தேவையான மருந்துப் பொருட்களை இலங்கையிலேயே தயாரித்துக்கொள்வதற்காக, 46 முதலீட்டாளர்களுடன் அரச மருந்து தயாரிப்பு கூட்டுத்தாபனம் ஒப்பந்தம் செய்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

வருடாந்தம் மருந்து இறக்குமதிக்காக 45 பில்லியன் ரூபாயை அரசாங்கம் செலவிடுவதால், இந்த நிதியை சேமிப்பதற்காகவே மருந்துகளை இலங்கையில் தயாரிக்க முடிவெடுத்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

அதற்கமைய கண்டி, ஹொரணை, நுவரெலியா, இரத்மலானை, களுத்துறை ஆகிய இடங்களிலுள்ள 6 தொழிற்சாலைகளில் தற்போது மருந்து தயாரிப்புகள் முன்னெடுக்கப்படுவதுடன் இந்த வருட நிறைவுக்கு முன்னர் மேலும் 3 மருந்து உற்பத்தி தொழிற்சாலைகளை திறப்பதற்கு திட்டமிட்டுள்ளதாகவும் 2020ஆம் ஆண்டாகும் போது இந்நாட்டின் மருந்து தேவையின் 85 சதவீதத்தை இலங்கையிலே​யே தயாரிக்க வேண்டுமென்பதே அரசின் எதிர்பார்ப்பு என்றும் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

Related posts