ஊடகவியலாளர்களுக்கு இலட்சனை பொறிக்கப்பட்ட ரீ.சேட் வழங்கிவைக்கும் நிகழ்வு

(க.விஜயரெத்தினம்,கிலசன் ,சுதாகரன்,முஸ்தபா,மேகனதாஸ்)

வெற்றி ரெப் நியூஸ் இணையத்தள ஊடகவியலாளர்களுக்கு இலட்சனை பொறிக்கப்பட்ட ரீ.சேட் வழங்கிவைக்கும் நிகழ்வு களுவாஞ்சிக்குடி கஜா கலாசார விடுதியில் அவ் இணையத்தளத்தின் பிரதம ஆசிரியர் ஊடகவியலாளர் சா.நடனசபேசன் தலைமையில் 1 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

 இந் நிகழ்வுக்கு அதிதிகளாக சுவிஸ் நாட்டில் வசிக்கும்  சுவிஸ் உதயம் அமைப்பின் பொருளாளர் சமூகசேவகர் க.துரைநாயகம்,அவ் அமைப்பின் பொதுச் செயலாளர் சமூகசேவகர் அம்பலவாணர் ராஜன் சுவிஸ் உதயம் அமைப்பின் கிழக்கு மாகாணக்கிளைத் தலைவர் ஓய்வுபெற்ற பிரதிக்கல்விப் பணிப்பாளர் மு.விமலநாதன் மட்டக்களப்பு மாநகரசபை உறுப்பினர் சுவிஸ் உதயம் அமைப்பின் உப செயலாளர் திருமதி செல்வி மனோகர் அவ் அமைப்பின் உறுப்பினர் அகிலன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

இந்த ரீ.சேட்டினை சுவிஸ் உதயம் அமைப்பின் செயலாளர் அம்பலவாணர் ராஜன் அவர்களது நிதி அனுசரணையில் வழங்கி  வைக்கப்பட்டதுடன் மட்டக்களப்பு,அம்பாரை மாவட்டங்களைச் சேர்ந்த 20 ஊடகவியலாளர்களுக்கு இச் ரீ சேட் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது 

Related posts