எரிபொருளின் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளதாக நிதி அமைச்சர் தெரிவித்துள்ளார்

இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருளின் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளதாக நிதி அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்ஒக்டேன் 92 ரக பெற்றோல் லீற்றரின் விலை 3 ரூபாவால் அதிகரிப்பட்டுள்ள நிலையில் அதன் புதிய விலை 137 ரூபாவாகும். ஒக்டேன் 95 ரக பெற்றோல் லீற்றரின் விலை 7 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில் , அதன் புதிய விலை 157 ரூபாவாகும்ஒடோ டீசல் லீற்றரொன்றின் விலை ஒரு ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது. அதன்படி , ஒடோ டீசலின் புதிய விலை 104 ரூபாவாகும்.

Related posts