ஐக்கிய தேசியக்கட்சி முன்னணி மக்கள் நலன்சார்ந்த திட்டங்களை சரியாக கொண்டு செல்லவில்லை

ஐக்கிய தேசியக்கட்சி முன்னணி  மக்கள் நலன்சார்ந்த திட்டங்களை சரியாக கொண்டு செல்லவில்லை.அதற்கான அங்கிகாரங்களை வழங்கவில்லை.வெறுமனே பேச்சுவார்த்தை என்று பிரதமர் காலத்தை தள்ளிக்கொண்டு போகின்றார்.உருப்படியான எந்தவொரு வேலைத்திட்டத்தையும் அவர் கொண்டு போகவில்லை.ஆகவே நாங்கள் மிகப்பெரிய மின்சாரப் பிரச்சனைக்கு உள்வாங்கியுள்ளோம் என கிழக்கு மாகாண ஆளுநர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்டத்திற்கான ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சியின்  பிரதான காரியாலயம்  திங்கட்கிழமை(1.4.2019) பிற்பகல் 2.00 மணியளவில்  ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட தமிழ் பிரதேச தலைவர் ஹரிதரன் கிரி தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்விற்கு பிரதம விருந்தினராக சுதந்திரக்கட்சியின் பொதுச்செயலாளர் தயாசிறி ஜயசேகர,கிழக்கு மாகாண ஆளுநர் எம்.எல்.ஏ.எம் ஹிஸ்புல்லா,மட்டக்களப்பு மாவட்ட ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி அமைப்பாளர்கள்,உள்ளுராட்சிமன்ற தவிசாளர்,உறுப்பினர்கள்,உட்பட பலர் கலந்துகொண்டார்கள்.இந்நிகழ்வில் மாவட்டத்தில் தாய் தந்தையர்களை இழந்த 100 பாடசாலை மாணவர்களுக்கு 2500ரூபா பெறுமதியான வங்கிப்புத்தங்களும்,தெரிவு செய்யப்பட்டுள்ள 25கர்ப்பிணி தாய்மார்களுக்கு உபகரணப்பொதிகள் வழங்கி வைக்கப்பட்டது.

இத்திறப்பு விழாவில் கௌரவ அதிதியாக கலந்துகொண்டு அலுவலகத்தை திறந்து வைத்து பேசுகையில் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ச்சியாக குறிப்பிடுகையில்:-

அதிமேதகு மைத்திரிபால சிறிசேன தலைமையிலான ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியானது குறிப்பாக சிறுபான்மையின மக்களின் மத்தியில் மதிப்பும்,செல்வாக்குள்ள கட்சியாக ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி மாறியிருக்கின்றது.கடந்த ஜனாதிபதி தேர்தலின் பின்னர் ஜனாதிபதியாக தெரிவுசெய்யப்பட்டுள்ள மைத்திரிபால சிறிசேன வடகிழக்குப் பிரதேசத்தின் அபிவிருத்தியிலும்,மக்களின் அடிப்படைப்பிரச்சனைகளை இனங்காணுவதிலும், தீர்த்து வைப்பதிலும் முனைப்புடன் செயற்படுகின்றார்.கடந்த 4ஆண்டுகளில் கட்சியானது அரசாங்கத்துடன் இருந்து  மீண்டும் அரசாங்கத்துடன் இணைந்து செயற்பட்டது.

இருந்தாலும் பிரதமர் தலைமையிலான ஐக்கிய தேசியக்கட்சியினுடைய செயற்பாடுகள்,ஊழலுக்கு கொடுக்கின்ற முக்கியத்துவம்,அதே முக்கியத்துவத்தை மக்களின் பிரச்சனைகளை தீர்ப்பதில் அசமந்தப்போக்கு, மத்தியவங்கி கொள்ளை,இவ்வாறான பல்வேறுபட்ட சம்பவங்களினால் இந்த அரசாங்கத்தைவிட்டு வெளியேறவேண்டும் என்று ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி தீர்மானித்தது.அதனால் நாம் அரசாங்கத்தை விட்டு வெளியேறினோம்.

உங்களுக்கு தெரியும் இன்று மின்சாரவெட்டு என்று நான்கு மணித்தியாலங்கள் என்று ஆரம்பித்துவிட்டார்கள்.இன்னும் 2அல்லது 3மாதங்கள் கடந்து செல்கின்றபோது ஆகக்குறைந்தது 12 மணித்தியாலங்கள் மின்வெட்டுக்களை அமுல்செய்யவேண்டிய நிலைக்கு நாம் தள்ளப்பட்டுள்ளோம்.காரணம் 4வருடங்களில் புதிய மின்சார உற்பத்தியை அரசாங்கம் செய்யவில்லை.எதிர்வரும் காலங்களில் என்ன மின்சாரம் தேவையென்று இந்த ஆண்டிலே அதற்கான முன்னேற்ற திட்டமிடலுடன் செய்யவேண்டும்.நாளாந்தம். மக்களினுடைய மின்சாரத்தேவை அதிகரித்துக்கொண்டு போகின்றது.மக்களுடைய மீள்குடியேற்றம் அதிகரிக்கும்போது அதற்கான திட்டங்களை நாம் சரியாக செல்ல வேண்டும்.

ஐக்கிய தேசியக்கட்சி முன்னணி  மக்கள் நலன்சார்ந்த திட்டங்களை சரியாக கொண்டு செல்லவில்லை.அதற்கான அங்கிகாரங்களை வழங்கவில்லை.வெறுமனே பேச்சுவார்த்தை என்று பிரதமர் காலத்தை தள்ளிக்கொண்டு போகின்றார்.உருப்படியான எந்தவொரு வேலைத்திட்டத்தையும் அவர் கொண்டு போகவில்லை.ஆகவே நாங்கள் மிகப்பெரிய மின்சாரப் பிரச்சனைக்கு உள்வாங்கியுள்ளோம்.அதேபோன்று ஒவ்வொரு துறையையும் முன்னேற்றி, முன்னோக்கிச் செல்லமுடியும்.

கிழக்கு மாகாணம் சகலதுறைகளில் முன்னேற்றம் காணவில்லை.கல்வி,விளையாட்டு,சுகாதாரம்,பொருளாதாரம் இன்னும் முன்னேற்றம் காணவில்லை.கிழக்கு மாகாணத்தை சகல துறைகளிலும் முன்னேற்றி கட்டியெழுப்பமுடியும்.அதற்கு தனித்துவமான ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி அரசாங்கத்தை பலமாக அமைக்க வேண்டும்.அதற்கு இனம்,மதம்,மொழி,ஜாதி,பிரதேச வேறுபாடுகளை மறந்து சமாதானம்,சமத்துவமாக உழைக்கவேண்டும்.அப்போதுதான் பொருளாதாரப்பிரச்சனைக்கு தீர்த்து இனங்களுக்கிடையில் முரண்பாடுகளை களைந்து அவர்கள் ஒற்றுமையாக வாழக்கூடிய ஒரு சூழ்நிலையை ஏற்படுத்த வேண்டும்.அப்போதுதான் இனங்களுக்கிடையிலான இனப்பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு எட்டப்படும்

Related posts