கத்தரிக்காய் நிவாரணம் : பயனுள்ள இரட்டை நிவாரணம்.

இலங்கையில் கொரோனா நெருக்கடிநிலையையடுத்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணப்பணிகள் பல்வேறுகோணங்களில் அரசாங்கத்தினாலும் பல்வேறு அமைப்புகளாலும் தனவந்தர்களாலும் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன.

 
எனினும் அம்பாறை மாவட்டத்தில் வழமையான உலருணவு நிவாரணங்களை வழங்கிவந்த ஒரு குழுவினர் வித்தியாசமான  நிவாரணப்பணியை முன்னெடுத்துள்ளனர்.
மரக்கறி உற்பத்தியீலீடுபட்டு அதனை விற்கமுடியாமல் திண்டாடிய ஏழைவிவசாயிகளுக்கும் மரக்கறித்தட்டுப்பாட்டால் அல்லலுறும் பொதுமக்களுக்கும் நிவாரணமளிக்கும் திட்டமொன்றை முன்னெடுத்துள்ளனர். அதாவது இருசாரார் பயன்பெறும் இரட்டைநிவாரணத்திட்டமாகும்.
 
பொத்துவில் பிரதேத்தில் குறிப்பாக ஊறணி மணற்சேனை போன்ற கிராமங்களில் செய்கையிடப்பட்ட கத்தரி வெண்டி பயற்றை போன்ற மரக்கறிகறிகளை விற்கமுடியாமல் வெறுமனே மாட்டுக்குக்கொடுக்கவேண்டிய கையறுநிலையிலிருந்தனர்.
 
அங்கு உலருணவுப்பொதிகளை வழங்கச்சென்ற காரைதீவுபிரதேசபைத்தவிசாளரும் சமுகசெயற்பாட்டாளருமான கி.ஜெயசிறில் இளம்விஞ்ஞானி சோ.வினோஜ்குமார் சமுகசெயற்பாட்டாளர் வி.ரி.சகாதேவராஜா அடங்கிய குழுவினர் இப்பிரச்சினையை பொத்துவில் பிரதேசசெயலாளர் ஆர்.திரவியராஜ் முன்னிலையில் கேள்வியுற்றனர்.
அந்த இடத்திலேயே அவர்களுக்கான தீர்வையும் பிரதேசசெயலாளர் திரவியராஜ் முன்வைத்தார். அதாவது இந்த ஏழைத்தொழிலாளிகளினது உற்பத்திப்பொருட்களை நியாயமானவிலையில் கொள்வனவுசெய்து மரக்கறி தட்டுப்பாடு நிலவும் குறிப்பாக வாழ்வாதாரத்தை இழந்து நிற்கும் மக்களுக்கு இலவசமாக வழங்கினால் பயனுடையதாகவிருக்கும். ஒருவகையில் இது இரட்டை நிவாரணமாகும் என்றார்.
உடனே அதனைச்செயற்படுத்துவதாக்கூறி அந்த ஏழைவிவசாயிகளை அழைத்து தங்கள் உற்பத்திப்பொருட்களின் விலைகளை அறிந்தே நாளை காலை வருவதாகவும் ஒவ்வொன்றிலும் 1000கிலோ பறித்து வைத்திருக்கும
hறும் கூறினர்.
அதற்கிணங்க மறுநாள் அதிகாலை அபாயவலயமான அக்கரைப்பற்றையும் தாண்டி 60கிலோமீற்றர் தூரம் சென்று அவற்றை அவர்களும் சேர்ந்து பறித்து காரைதீவு பகுதிக்கு காலை 10மணியளவில் கொண்டுவந்து பின்தங்கிய மக்களுக்கு வீடுவீடாக விநியோகித்தனர்.
எதிர்வரும் தினங்களில் கல்முனை பாண்டிருப்பு பெரியநீலாவணை போன்ற பிரதேசங்களிலும் விநியோகிக்கத்திட்டமிட்டுள்ளதாக அவர்கள் தெரிவித்தனர்.
இதுதொடர்பான நிவாரணக்குழு உறுப்பினரான யாழ்.பல்கலைக்கழக மாணவன் சோ.வினோஜ்குமார் கூறியதாவது:
கடந்த சில தினங்களில் ஆலையடிவேம்பு திருக்கோவில் பொத்துவில் போன்ற பிரதேச செயலகத்திற்குட்பட்ட ஊறணி மணற்சேனை திருப்பதி சங்குமண்கிராமம் உமிரி தங்கவேலாயுதபுரம் கஞ்சிகுடிச்சாறு தாமரைக்குளம் மளவராஜன் கிராமம் நாவற்காடு பனங்காடு ஆலையடிவேம்பு போன்ற சில கிராமங்களுக்கு நிவாரணம் வழங்க சென்றிருந்தோம். அப்போது மரக்கறிகள் ( வெண்டி மற்றும் கத்தரி ) விற்கப்படாமல் பாதைகளில் கிடப்பதைக் கண்டு மிகவும் கவலையடைந்தோம்.
அந்த ஏழை விவசாயிகளுக்கு உதவவேண்டும் என்று நினைத்தோம் .அப்போது நிவாரணப்பணிகளில் எம்முடனிருந்த பிரதேசசெயலாளர் ஆர்.திரவியராஜ் அந்த இடத்திலேயே அவர்களுக்கான தீர்வையும் முன்வைத்தார். 
அதாவது இந்த ஏழைத்தொழிலாளிகளினது உற்பத்திப்பொருட்களை நியாயமானவிலையில் கொள்வனவுசெய்து மரக்கறி தட்டுப்பாடு நிலவும் குறிப்பாக வாழ்வாதாரத்தை இழந்து நிற்கும் மக்களுக்கு இலவசமாக வழங்கினால் பயனுடையதாகவிருக்கும். ஒருவகையில் இது இரட்டை நிவாரணமாகும் என்றார்.
 
முதற்கட்டமாக நேற்று  1கிலோ கத்தரிக்காய் 20 ருபாவுக்கு 1000கிலோ  கத்தரிக்காய் மற்றும் 500கிலோ  வெண்டிக்காய் போன்றவற்றைக் கொள்வனவுசெய்து காரைதீவின் பின்தங்கியபகுதிகளில் வழங்கினோம். நாளை தொடக்கம் கல்முனைப்பிராந்தியத்தில் பிரதேசசெயலாளர் எ.ஜே.அதிசயராஜ் முன்னிலையில் அவற்றை இலவசமாக வறுமையான மக்களுக்கு வழங்கவுள்ளோம்.
 
எமது அணியில்  பிரதானமாக காரைதீவு சமுகசெயற்பாட்டாளர்களான  கி.ஜெயசிறில்  வி.ரி.சகாதேவராஜா அடங்கினர். நாம் மூவரும் இதுவரை பல புலம்பெயர் அமைப்புகளான லண்டன் சைவமுன்னேற்றச்சங்கம் சுவிஸ் சூரிச் ‘அன்பேசிவம்’ பிரிட்டன் ‘சிவகாமி அறக்கட்டளை நிதியம்’  பிரிட்டன் சைவத்திருக்கோவில்கள் ஒன்றியம் அசிஸ்ற் ஆர்ஆர் அமைப்பு வசீகரன் அறக்கட்டளை நிதியம் ஜ.பி.சி. மற்றும் தமிழ்வின் போன்ற அமைப்புகளாலும் சில தனிப்பட்ட தனவந்தர்களின் உதவியாலும் சுமார் 30லட்சருபாக்களை வரவழைத்தோம். 
 
அதற்கு  ஊரடங்குவேளைகளிலும் சிரமங்களுக்குமத்தியில் உணவுப்பொருட்களை வாங்கிப் தொண்டர்களான மோகன் தினேஸ்குமார் பிரியராஜ் வினோ வினோஜன் போன்ற பலரின் உதவியுடன்  பொதிசெய்து உலருணவுப்பொதிகளை அம்பாறை மாவட்டத்திலுள்ள  பொத்துவில் திருக்கோவில் நாவிதன்வெளி ஆலையடிவேம்பு காரைதீவு நிந்தவூர் அட்டாளைச்சேனை ஆலையடிவேம்பு  சம்மாந்துறை  போன்ற பிரதேச செலயாளர்பிரிவுகளிலுள்ள பின்தங்கிய கிராம மக்களுக்கு ஊரடங்குவேளைகளிலும்  சென்று கடந்த ஒருமாதத்திற்கும் மேலாக வழங்கி வருகிறோம்.
.அதற்கு தவிசாளர் ஜெயசிறில் அண்ணாவின் வாகனங்கள் இரவுபகலான உற்சாகம் பெரிதும் உதவியது. சகா சேரின் முகாமைத்துவம் வழிகாட்டல் பிரதேசசெயலாளர்களுடனான தொடர்பு போன்றன  வெற்றிகரமாகவழங்க பெரிதும் உதவியது.
 
குறிப்பாக வளத்தாப்பிட்டி பளவெளி அட்டப்பள்ளம் காரைதீவு வீரச்சோலை மண்டானை காயத்ரிகிராமம் மத்தியமுகாம் அன்னமலை சவளக்கடை  சங்குமண்கண்டி உமிரி சங்குமண்கிராமம் தங்கவேலாயுதபுரம் திருப்பதி கஞ்சிக்குடிச்சாறு திருப்பதி கனகர்கிராமம் மணற்சேனை  செல்வபுரம் கோமாரி ஆலையடிவேம்பு பனங்காடு மளவராயன்கிராமம் நாவற்காடு போன்ற பிரதேசங்கள் பயன்பெற்றன.
இதன்போது எம்முடன் நிவாரணப்பணிகளில் கூடவந்து இறுதிவரை உரமூட்டிய பிரதேசசெயலாளர்களான எஸ்.ரங்கநாதன்(நாவிதன்வெளி) ஆர்.திரவியராஜ்(பொத்துவில்) ரி.கஜேந்திரன்(திருக்கோவில்) க.லவநாதன்(ஆலையடிவேம்பு)ஆகியோரை பெரிதும் நன்றியோடு பார்க்கிறோம்.
எமது நிவாரணப்பணிகள் உலருவுப்பொருட்கள் குழந்தைகளுக்கான பால்மா மரக்கறி என  கொரோனா முடியும்வரை  இடையறாது தொடரும். என்றார்.
 
வி.ரி.சகாதேவராஜா
காரைதீவு குறூப் நிருபர்

Related posts