கம்பெரலிய நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் சின்ன ஊறணி பேச்சியம்மன் ஆலய முதலாம் குறுக்கு வீதி புனரமைப்பு…

(துதி)

 
 
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து ஸ்ரீநேசன் அவர்களினால் ஒதுக்கீடு செய்யப்பட்ட கம்பெரலிய திட்ட நிதியின் மூலம் சின்ன ஊறணி பேச்சியம்மன் ஆலய முதலாம் குறுக்கு வீதியானது கொங்றிட் வீதியாக அபிவிருத்தி செய்யும் பணிகள்  (29) ஆரம்பித்து வைக்கப்பட்டது.
 
மாநகர சபையின் பிரதி முதல்வர் க.சத்தியசீலன் மற்றும் 04 ஆம் வட்டாரத்தில் (சின்ன ஊறணி) பட்டியல் வேட்பாளராக போட்டியிட்ட மேகராஜ் ஆகியோரின் வேண்டுகோளிற்கிணங்க கம்பெரலிய நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் பாராளுமன்ற உறுப்பினரால் மேற்கொள்ளப்பட்ட 02 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் மேற்படி வீதி புனரமைப்புச் செய்யப்படவுள்ளது. 
 
சின்ன ஊறணி பாரதி சன சமுக நிலையம் மற்றும் மட்டக்களப்பு மாநகர சபை என்பன இணைந்து மேற்கொள்ளும் குறித்த வீதியின் அபிவிருத்திப் பணிகளை மாநகர முதல்வர் தியாகராஜா சரவணபவன், பிரதி முதல்வர் கந்தசாமி சத்தியசீலன், மாநகரசபை உறுப்பினர்களான வேலுப்பிள்ளை தவராஜா, மயில்வாகனம் ரூபாகரன், அந்தோணி கிருரஜன், துரைசிங்கம் மதன் ஆகியோருடன் மாநகர பொறியிலாளர் திருமதி. சித்திராதேவி லிங்கேஸ்வரன், தொழிநுட்ப உத்தியோகத்தர் ச.ராஜ்குமார் மற்றும் பிரதேச மக்கள் ஆகியோரும் இணைந்து ஆரம்பித்து வைத்தனர்.
 

Related posts