கர்ப்பிணி பெண் உத்தியோகத்தர் மீது ஏறாவூரை சேர்ந்த நபர் செய்த அடாவடி !

மட்டக்களப்பு செங்கலடி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கொடுவாமடு கமநலசேவை நிலையத்தில் புகுந்த ஏறாவூர் நபர் அங்கு கடமையில் இருந்த கர்ப்பிணி பெண் உத்தியோகத்தரிடம் தரக்குரைவதகப் பேசிய அடாவடித்தனம் செய்த சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.

இது குறித்து மேலும் தெரியவருவதாவது செங்கலடி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கொடுவாமடு கமநலசேவை நிலையத்திற்கு நேற்றையதினம் விவசாயிகளுக்கான உரமானியம் பெறுவதற்கான பற்றுச்சீட்டை பெற்று கொள்ள வந்த ஏறாவூரைச் சேர்ந்த நபர் ஒருவர் அங்கு கடமையில் இருந்த கர்ப்பிணி பெண் உத்தியோகத்தருடன் வாய்தர்க்கம் புரிந்துள்ளார். குறித்த நபர் பற்றுச்சீட்டு பெற வரிசையில் பலர் நின்றபோதும் அதனை தாண்டி சென்று உரமானி பற்றுச்சீட்டை வழங்கி கொண்டிருந்த கர்ப்பிணி பெண் உத்தியோகத்தரிடம் தமக்கு முதலில் வழங்குமாறு கோரியுள்ளார்.

 பலர் வரிசையில் நிற்கும் நிலையில் மதிய உணவு நேரம் என்ற காரணத்தால் சிறிது நேரம் அமர்ந்திருக்குமாரும் தான் மதிய உணவு உண்டு விட்டு வருகிறேன் நான் ஒரு கர்ப்பிணி உடல் நிலை இயலாமல் உள்ளது சாப்பிட்டுவிட்டு வருகிறேன் எனக் கூறியுள்ளார். இதற்கு அந்த நபர் முதலில் எனது வேலையை முடியுங்கள் நான் யார் என்று தெரியுமா? நான் ஏறாவூர் பிரதேசசெயலக RDO முதலில் எனக்கு வேலையை முடித்துவிட்டுசாப்பிட போங்கள் என தகாத வார்த்தைப் பிரியோகத்தை பிரயோகித்து கர்ப்பிணி உத்தியோகத்தர் மீது; அவரின் கையில் இருந்த பற்றுசீட்டுபெறும் ஆவணங்களை முகத்தில் வீசிஎறிந்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த கர்ப்பிணி பெண் உத்தியோகத்தர் அழுது புலம்பியுள்ளார்.

இச் சம்பவம் அங்கு வரிசையில் நின்ற பலருக்கு பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியிருந்தது. உத்தியோகத்தர் இவரின்செயற்பாட்டையடுத்து உடல்நிலை இயலாமல் அழுதுகொண்டிருந்தார். மீண்டும் ஏறாவூரைச் சேர்ந்த குறித்த நபர் திரும்ப திரும்ப உடனடியாக தமக்கு பற்றுச்சீட்டு வழங்குமாறு கோரியுள்ளார்; எனக்கு உடல்நிலை இயலாமல் உள்ளது எனவே இப்படி செய்த உங்களுக்கு பற்றுச்சீட்டு வழங்க முடியாது வரிசைப்படி வாருங்கள் என மீண்டும் மீண்டும் கூறியும் அந்த நபர் கேட்காது அடாவடி செய்த நிலையில் அவரை அங்கு பற்றுச்சீட்டு பெறவந்தவர்கள் வெளியனுப்பிள்ளனர்.

ஒரு கர்ப்பிணி தாய் என்று பாராது அவரது தாய்மைக்கு இழுக்கை ஏற்படுத்தி அவரது உடல் நலத்திற்கு கேடு விளைவிக்கும் வகையில் செயற்பட்ட குறித்த நபர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அங்கிருந்த பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

குறித்த சம்பவம் தொடர்பான வீடியோ காட்சிகள் எமக்கு கிடைத்துள்ளது.

Related posts