கல்குடா பொலிஸ் நிலைய நிர்வாகப் பிரிவு பொறுப்பதிகாரி கைது

கல்குடா பொலிஸ் நிலைய நிர்வாகப் பிரிவு பொறுப்பதிகாரி 3 இலட்சம் ரூபா பணத்தை இலஞ்சமாகப் பெற்றபோது இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.

செங்கல் வியாபாரியொருவர் சூழல் அனுமதிப்பத்திரமொன்றைப் பெற்றுக்கொள்வதற்கு தேவையான கடிதமொன்றை வழங்குவதற்காக 5 இலட்சம் ரூபாவை இலஞ்சமாகக் கோரியுள்ளதாக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு தெரிவித்தது.

அதில் 3 இலட்சம் ரூபா பணத்தை வாழைச்சேனை கோறளைப்பற்று பிரதேச சபைக்குள் வைத்து இன்று பகல் பெற்றுக்கொண்ட போது, அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

வேயங்கொட பகுதியை சேர்ந்த வர்த்தகர் ஒருவரிடமே கல்குடா பொலிஸ் நிலைய நிர்வாகப் பிரிவு பொறுப்பதிகாரி இலஞ்சத்தைப் பெற்றுக்கொண்டுள்ளார்.

கல்குடா பகுதியில் புதிதாக ஆரம்பிக்கவுள்ள செங்கல் சூளைக்கே குறித்த வர்த்தகர் சூழல் பாதுகாப்புக் கடிதத்தை கோரியுள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

Related posts