கல்முனை தமிழ்பிரதேசசெயலகத்தினைத் தரம் உயர்த்துவதனால் முஸ்லிம் மக்களுக்கு எவ்வித பாதிப்பும் இல்லை மாநகரசபை உறுப்பினர் எஸ்.சந்திரசேகரம்

30 வருடங்களாக தரமுயர்த்தப்படாமல் இயங்கிக் கொண்டிருக்கின்ற கல்முனை தமிழ்பிரதேசசெயலகத்தினைத் தரம் உயர்த்துவதனால் முஸ்லிம் மக்களுக்கு எவ்வித பாதிப்பும்  இல்லை என்பதனை சிந்திக்காத சில அரசியல்வாதிகள் தங்களது அரசியல் இலாபத்திற்காக தமிழ் முஸ்லிம் உறவுகளை சீரழிப்பதற்கான செயற்பாடுகளை மேற்கொள்வதாக கல்முனை மாநகரசபை உறுப்பினர் எஸ்.சந்திரசேகரம் (ராஜன் )தெரிவித்தார்

சர்வமதத் தலைவர்களின் ஏற்பாட்டிலும் மாநகர சபை உறுப்பினர் எஸ்.சந்திரசேகரம் அவர்களது ஒழுங்கமைப்பில் ஊடகவியலாளர் சந்திப்பு கல்முனை பௌத்த விகாரையில் வியாழக்கிழமை மாலை நடைபெற்றது. இதில் பாஸ்டர் கிருபராசா ,ரன் முத்துக்கல சங்கரத்தினதேரர் , சிவசிறி சச்திதானந்தன் குருக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

அவர் மேலும் கருத்துத்தெரிவிக்கையில் கல்முனை வடக்குப்பிரதேசசெயலகமானது  1989ஆம் ஆண்டில் இருந்து இயங்கிவருகின்றது இதில் 29 கிராமசேவகர் பிரிவு இருப்பதுடன் நிருவாகம்,திட்டமிடல் சமுர்த்தி காணி ஆட்பதிவுத்திணைக்களம் பதிவாளர்பிரிவு போன்றவைகளுடன் இயங்கிவருகின்றது.இதனைத் தரமுயர்த்தாது தங்களது அரசியல் இலாபத்திற்காக  சட்டவிரோதமான  பிரதேசசெயலகம் எனப் பொய்யாகப் பிரச்சாரம் செய்து மக்களைக் குழப்பும் அரசியல் வாதிகளையும் பொது அமைப்புக்களையும் நான் வன்மையாகக் கண்டிக்கின்றேன்

கல்முனை வடக்குப் பிரதேசசெயலகத்தினை தரமுயர்த்தி  அதற்கான அனைத்து அதிகாரத்தினையும் வழங்கவேண்டும் இவ்வாறு வழங்கப்படுவதனால் யாரையும் பாதிக்காது

முஸ்லிம் மக்களின் காணியினையோ அல்லது நிதியினையோ தட்டிப்பறிப்பதற்காக பிரதேசசெயலகத்தைத் தரமயர்த்தக் கேட்கவில்லை  என்பதனை முஸ்லிம் மக்கள் புரிந்துகொள்ளவேண்டும் நாங்கள் எங்கள்  பிரதேச அபிவிருத்தியினை நாங்கள் கையாள விரும்புகின்றோம் இவ்வாறான நிலையில் ஒருசில அரசியல்வாதிகளும் முகவரியற்ற பொது  அமைப்புக்களும் எங்களது உரிமையில் கையடிக்க வருவது எதற்காக

கல்முனை வடக்கு அதார வைத்தியசாலை பழைமைவாய்ந்தது அது இருக்கும் போது கல்முனை வடக்கு வைத்தியசாலையில் இருந்து ஒன்றறைக் கிலோமீற்றர் தூரத்தில் அஷ்ரப் வைத்தியசாலை உருவாக்கப்பட்டது அப்போது தமிழர்கள் எதிர்க்கவில்லை அரசாங்கத்தால் கிடைக்கும் சலுகைகளை மக்கள் பெறவேண்டும் அதே போன்றுதான் எங்களது நிருவாகச் செயற்பாடுகளை இலகுபடுத்துவதற்காக கட்டாயம் பிரதேசசெயலகம் தரமுயர்த்தவேண்டும் கல்முனைப் பிரதேசத்தில் தமிழ் முஸ்லிம் மக்கள் ஒற்றுமையாக வாழ்ந்துகொண்டிருக்கின்றனர் இவர்களது ஒற்றுமையினை சீர் குலைத்து இனமுறுகலை ஏற்படுத்தும் அரசியல் வாதிகள் இவ்வாறான செயற்பாடுகளை நிறுத்த வேண்டும்  என்றார்

பாஸ்டர் கிருபராசா ,ரன் மத்துக்கல சங்கரத்தினதேரர்  சிவசிறி சச்திதானந்தன் குருக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்

OLYMPUS DIGITAL CAMERA

Related posts