களுதாவளையில் நிலைபேறான சுற்றாடலை உருவாக்கும் செயற்திட்டத்தின் மூலம் 350 நாவல் மரக்கன்றுகள் நாட்டப்பட்டது

களுதாவளையில் நிலைபேறான சுற்றாடலை உருவாக்கும் செயற்திட்டத்தின் மூலம் 350 நாவல் மரக்கன்றுகள் நாட்டப்பட்டது.
 

ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஸவின் நிகழ்ச்சித் திட்டத்தின் பிரகாரம் எதிர்கால சந்ததியினருக்கு இயற்கையுடன் கூடிய சூழலை வழங்கும் வகையில் “நிலைபேறான சுற்றாடலை உருவாக்குவோம்” வேலைத்திட்டத்தின் கீழ் களுதாவளை -04 இல் காணப்படும் தோணாவின் இரு மருங்கிலும் நாவல் மரம் நடும் நிகழ்வு களுவாஞ்சிகுடி பிரதேச செயலாளர் திருமதி சிவப்பிரியா வில்வரெத்தினம் தலைமையில் இன்று சனிக்கிழமை(6)காலை இடம்பெற்றது.

இப்பிரதேசம் நீண்டகாலத்திற்கு முன்னர் நாவல் மரங்களுக்கு மிகவும் பிரசித்தி பெற்ற இடமாக காணப்பட்ட போதிலும் தற்போது விவசாய நடவடிக்கை காரணமாக அவை அழிக்கப்பட்டு அருகிப்போயுள்ளமையினை காணமுடிகின்றது.

இதனை கருத்திற்கொண்டு எமது எதிர்கால சந்ததியினரும் இவ்வகையான நன்மைகளை அனுபவிக்கும் பொருட்டு களுதாவளை நெய்தல் மேட்டு நில கமக்காரர் அமைப்பின் மேற்பார்வையில் கடற்கரையை அண்மித்துள்ள தோணாவினை அண்டிய பகுதிகளில் விவசாயம் மேற்கொள்ளும் காணி உரிமையாளர்களின் நேரடி கண்காணிப்பில் 350 நாவல் மரக்கன்றுகள் இன்றையைதினம் நடப்பட்டன.இவ்வாறு நாட்டப்பட்டுள்ள மரக்கன்றினால் பிரதேசத்தின் சுற்றுச்சூழல் பேணப்படக்கூடிய வாய்ப்பு இப்பிரதேச மக்களுக்கு கிடைக்கப்பெறும்.

இந் நிகழ்வில் களுவாஞ்சிகுடி பிரதேச செயலாளர் திருமதி சிவப்பிரியா வில்வரெத்தினம்,விவசாய போதனாசிரியர், களுதாவளை நெய்தல் மேட்டு நில கமக்காரர் அமைப்பு உறுப்பினர்கள், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் மற்றும் கிராம மக்கள் என பலரும் பங்குபற்றியிருந்தனர்.

Related posts