களுவன்கேணி, பலாச்சோலை வீட்டுத் திட்டங்கள் அடிக்கல் நாட்டி ஆரம்பிப்பு…

வீடமைப்பு நிர்மானத்துறை அமைச்சர் சஜித் பிறேமதாச அவர்களின் 150 வீட்டுத் திட்டங்களை உருவாக்குதல் எனும் தொனிப்பொருளில் அமைக்கப்படுகின்ற பலாச்சோலை கிராம வீட்டுத் திட்டத்தினை ஆரம்பிக்கும் முகமாக அடிக்கல் நாட்டு நிகழ்வு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஏற்hவூர்ப்பற்றுப் பிரதேசசபை களுவன்கேணி வட்டார உறுப்பினர் வே.பரமதேவா அவர்களின் தலைமையில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் அதிதிகளாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன், கிழக்கு மாகாண முன்னாள் விவசாய அமைச்சரும், இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் பொதுச் செயலாளருமாகிய கி.துரைராசசிங்கம், ஏறாவூர்ப்பற்றுப் பிரதேச சபைத் தவிசாளர் நா.கதிரவேல், பிரதித் தவிசாளர் கா.இராமசந்சந்திரன் வீடமைப்பு அதிகார சபையின் மட்டக்களப்பு முகாமையாளர் க.ஜெகநாதன் உட்பட பிரதேச சபை உறுப்பினர், கிராம சேவை உத்தியோகத்தர், அதிகாரிகள், பயனாளிகள், பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

இதன் போது 65 வீடுகளை உள்ளடக்கிய இவ்வீட்டுத் திட்டத்தினை ஆரம்பிக்கும் முகமாக அதிதிகளினால் அடிக்கல் நாட்டப்பட்டது. இவ்வீட்டுத் திட்டத்தில் மேலும் 10 வீடுகள் உள்ளடக்கப்பட்டு 03 கிராமங்களாக உருவாக்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

1996ம் ஆண்டு கிழக்கு மாகாண முன்னாள் விவசாய அமைச்சராகிய கி.துரைராசசிங்கம் அவர்கள் பாராளுமன்ற உறுப்பினராக இருந்த போது அவரின் முயற்சியினூடாக மேற்கொள்ளப்பட்ட இவ்வீட்டுத் திட்டம் பல்வேறு தடங்கல்களால் நிறைவேற்றப்படாமல் தற்போதைய அரசாங்கத்தின் திட்டத்தின் கீழ் இது உள்வாங்கப்பட்டு பூர்த்தி செய்யப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை களுவன்கேணி பிரதேசத்தில் 25 வீடுகளை உள்ளடக்கிய வீட்டுத் திட்டமும் இன்றைய தினம் அடிக்கல் நாட்டி ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.

Related posts