களுவாஞ்சிக்குடி, காத்தான்குடி பிரதேச செயலக பிரிவுகளில் போதைப் பொருள் பாவனையினைத் தடுக்க விழிப்புணர்வு செயற்பாடு.

 
 

போதையற்ற நாடு சௌபாக்கியமான தேசம் எனும் தேசிய வேலைத்திட்டத்திற்கு அமைவாக மட்டக்களப்பில் போதைப் பொருள் பாவனையினைத் தடுப்பதற்கான வேலைத்திட்டங்கள் களுவாஞ்சிக்குடி, காத்தான்குடி பிரதேச செயலக பிரிவுகளில்  (30) இடம்பெற்றது.
பாதுகாப்பு அமைச்சின் கீழ் செயற்பட்டுவரும் தேசிய அபாயகர ஒளடதங்கள் கட்டுப்பாட்டு சபையினால் நாடுபூராகவும் விழிப்புணர்வு நிகழ்வுகள் நடைமுறைப் படுத்தப்பட்டுவருகின்றன.

இதனடிப்படையில் வாகனங்களில் விழிப்புணர்வு ஸ்டிக்கர்கள் ஒட்டும் வேலைத்திட்டம், பொதுமக்களுக்கு விழிப்புணர்வூட்டும் துண்டுப்பிரசுரங்கள் என்பன விநியோகிக்கப்பட்டன.

மேலும் போதைப் பொருள் பாவனையினால் பாதிக்கப்பட்டவர்களுக்கான உளவளத்துனை ஆலேசனை தொலைபேசி துரித இலக்கமான 1927 இன் மூலம் தற்பொழுது வழங்கப்பட்டுவருகின்றது.

இந் நிகழ்வில் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், பொலிஸ் மற்றும் விசேட அதிரடிப்படை உயர் அதிகாரிகள், சிவில் உத்தியோகத்தர்கள் உட்பட பலரும் பிரசன்னமாயிருந்தனர்.

பாதுகாப்பு அமைச்சின் கீழ் இயங்கிவரும் தேசிய அபாயகர ஒளடதங்கள் கட்டுப்பாட்டுச் சபையினால்  போதைப் பொருள் பாவனையினால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் அதன் பாவனையால் துன்பப்படுபவர்கள் அதிலிருந்து விடுபடுவதற்குமான உளவள ஆலேசனைகள் தொடராக வழங்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Related posts