காலையில் வாகனவிபத்து!

காரைதீவு பிரதானவீதியில் தனியார் பஸ் மற்றும் கல்ஏற்றிவந்த ரிப்பரும் மோதியதில் சிலர் காயமுற்றனர்.
 
இச்சம்பவம்  (19) திங்கட்கிழமை காலை6.30மணியளவில் காரைதீவு கண்ணகை அம்மனாலயமருகில் பிரதானவீதியில் இடம்பெற்றது. வாகனவிபத்தில் கல்ரிப்பரின் முன்பாகம் முற்றாக  சேதமடைந்துள்ளது.
 
ரிப்பர் வாகனத்தில் முன்னாலிருந்த பயணித்தவர்கள் மற்றும் சாரதி காயத்திற்குள்ளாகி வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டனர்.
பஸ்ஸில் வந்தவர்கள் வேறுபஸ்ஸில் மாறிச்சென்றனர்.
 
சம்மாந்துறை போக்குவரத்துப்பொலிசார் உடனடியாக ஸ்தலத்திற்கு விரைந்து விசாரணைகளை மேற்கொண்டனர்.
பாணமையிலிருந்து மட்டக்களப்பு நோக்கி பயணித்த தனியார் பஸ் காரைதீவு பிரதானவீதி
தரிப்பிடத்தில்நின்று பயணிகளை ஏற்றிக்கொண்டிருந்தவேளை பின்னால் கல்முனை நோக்கி கற்களை எற்றிக்கொண்டுவந்த ரிப்பர் பஸ்ஸை முந்தப்புறப்பட்டபோது எதிராக வாகனமொன்று வந்ததால் மீண்டும் பஸ்பின்னால் திருப்பியபோது இவ்விபத்து இடம்பெற்றிருப்பதாக முதற்கட்ட விசாரணைகளிலிருந்து தெரியவருகிறது.
 
வீதியில் கண்ணாடித்துகள்கள் பரந்துகாணப்பட்டது. பொலிசார் விசாரணையைத் தொடர்கின்றனர்.

Related posts