கிழக்கில் தொற்றுக்கள் 1400க் கடந்தது. கல்முனையில் 868 மட்டக்களப்பில் 291 திருமலையில் 180 அம்பாறையில் 42.

கல்முனை பிராந்தியத்தில் 868..
கல்முனைப்பிராந்தியத்தில் 868ஆக தொற்றுக்கள் இனங்காணப்பட்டிருக்கின்றன. இப்பிராந்தியத்துள்வரும் அக்கரைப்பற்றுக் கொத்தணியில் இதுவரை  828பேர் இனங்காணப்பட்டுள்ளனர்.
அதில் அக்கரைப்பற்று 310 தொற்றுக்கள் அடுத்ததாக கல்முனை தெற்கு 195பொத்துவில் 77 அட்டாளைச்சேனை 82 சாய்ந்தமருது 51 ஆலையடிவேம்பு 36 இறக்காமம் 23 சம்மாந்துறை 21 கல்முனைவடக்கு 17 திருக்கோவில் 15 நிந்தவுர் 13 காரைதீவு 14 நாவிதன்வெளி 14 என தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்.
இதுவரை பிராந்தியத்தில் 10க்கு குறைந்த எண்ணிக்கையுடைய ஒரேயொரு சுகாதாரப்பிரிவாகஇருந்த நாவிதன்வெளிப்பிரிவில் இறுதியாக 5பேர் இனம்காணப்பட்டதன் அடிப்படையில்  அங்கு  தொற்றாளர்களின் எண்ணிக்கை இரட்டை இலக்கமாக அதாவது 14ஆக மாறியுள்ளது.

கல்முனை மாநகரில் 263அதேவேளை கல்முனை மாநகரஎல்லைக்குள் கொரோனா எண்ணிக்கை 263 தொற்றுக்களாக  அதிகரித்திருக்கிறது.
கல்முனை தெற்கில் 195பேரும் சாய்ந்தமருதில் 51பேரும் கல்முனை வடக்கில் 17பேரும் தொற்றுக்குள்ளாகியுள்ளனர். சாய்ந்தமருதில் ஒரு மரணம் சம்பவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
கல்முனையின் 11 கி.சே.பிரிவுகளில் முடக்கச்செயற்பாடு 09வது நாளாக அமுலில்உள்ளது.
மட்டக்களப்பில் 291…மட்டக்களப்பு மாவட்டத்தில் தொற்றாளர்களின் எண்ணிக்கை   291ஆக உயர்ந்துள்ளது. மாவட்டத்தில் கூடியதாக காத்தான்குடியில் 110 பேரும் கோறளைப்பற்றில் 68 பேரும் களுவாஞ்சிக்குடியில் 31பேரும் மட்டக்களப்பில் 25பேரும் ஏறாவூரில் 15 பேரும் இதுவரை இனங்காணப்பட்டுள்ளனர்.
திருமலையில் 180…திருமலை மாவட்டத்தில் தொற்றாளர்களின் எண்ணிக்கை   180ஆக உயர்ந்துள்ளது. மாவட்டத்தில் திருமலை நகரில் 93பேரும் மூதூரில் 42பேரும் கிண்ணியாவில் 18பேரும் கூடுதலாக இனங்காணப்பட்டுள்ளனர்.அங்கு ஆறு பாடசாலை மாணவர்களுக்கும் தொற்றுறுதி செய்யப்பட்டிருந்தது.
கிழக்கில் ஆகக்குறைந்த கொரோனாத்தொற்றாளர்கள் 42பேர் அம்பாறை சுகாதாரப்பிரிவிலும் ஆகக்கூடிய தொற்றாளர்கள் 868பேர் கல்முனை சுகாதாரப்பிரிவிலும் இருப்பது குறிப்பிடத்தக்கது.
42187பேருக்கு பிசிஆர் பரிசோதனை
இதுவரை கிழக்கில்     42187பேருக்கு பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டிருந்தது.இவற்றுள்.கல்முனைப்பிராந்தியத்தில் 20709 சோதனைகளும் மட்டக்களப்பில் 12123 சோதனைகளும் அம்பாறையில் 3105 சோதனைகளும் திருகோணமலையில் 6250 சோதனைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

08சிகிச்சை நிலையங்களில் 2738 அனுமதி
கிழக்கில் இதுவரை 06கொரோனா சிகிச்சை நிலையங்கள் இருந்துவந்தன.  புதிதாக மட்டுமாவட்டத்தில் பெரியகல்லாறு மற்றும் திருமi மாவட்டத்தில் குச்சவெளியிலும் இரு வைத்தியசாலைகள் சிகிச்சை நியைங்களாக மாற்றப்பட்டுள்ளன. அத்துடன் கிழக்கில் 08 கொரோனா சிகிச்சை நிலையங்களாகியுள்ளது.
கிழக்கிலுள்ள 08 கொரோனா சிகிச்சை நிலையங்களில் தற்போது 555கொரோனாத் தொற்றாளர்கள் சிகிச்சை பெற்றுவருகின்றனர். நேற்று (06.01.2021) புதன்;கிழமை  வரை 2738பேர் மேற்படி 8 வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டு அவர்களில் 2170பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.13பேர் இடமாற்றப்பட்டுள்ளனர்.

Related posts