கிழக்குப் பல்கலைக்கழக மாணவர்கள் கவனயீர்ப்பு

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு சம்பள உயர்வை வழங்குமாறு கோரி, கிழக்குப் பல்கலைக்கழக சுவாமி விபுலானந்தர் அழகியற் கற்கைகள் நிறுவக மாணவர்கள், கவனயீர்ப்புப் போராட்டத்தில் மட்டக்களப்பில்  (23) ஈடுபட்டனர்.

மட்டக்களப்பு, கல்லடியிலுள்ள கிழக்குப் பல்கலைக்கழக சுவாமி விபுலானந்தர் அழகியற் கற்கைகள் நிறுவகத்துக்கு முன்னால் இடம்பெற்ற மாணவர்களின் இந்தக் கவனயீர்ப்புப் போராட்டத்தின் போது, பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வுக் கோரிக்கையான 1,000 ரூபாயை வழங்க வேண்டுமென வலியுறுத்தப்பட்டது.

கிழக்குப் பல்கலைக்கழக சுவாமி விபுலானந்தர் அழகியற் கற்கைகள் நிறுவக மாணவர் சங்கத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்தக் கவனயீர்ப்பில், நிறுவகத்திலுள்ள சகல மாணவர்களும் பங்கேற்றனர்.

“உதிரத்தை உரமாக்கும் உயிர்களுக்காய் போராடுவோம்”, “ஊதியத்தைச் சுரண்டாதே”, “அட்டைக்கடி படுவோருக்கு நியாயப்படி சம்பளம் கொடு”, “ஊதியத்துக்கான போராட்டம்” போன்ற வசனங்கள் அடங்கிய பதாதைகளை தாங்கியவண்ணம், மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Related posts