கிழக்கு மாகாணத்தை மையப்படுத்திய புதியதோர் பொருளாதார மேம்பாட்டுக்கான புரட்சியின் பங்காளிகளாக இருப்பதற்கு கிழக்கு மக்கள் எப்போதும் என்னோடு இணைந்திருங்கள். கோத்தபாய ராஜபக்ஷ தெரிவிப்பு.

கிழக்கு மாகாணத்தை மையப்படுத்திய புதியதோர் பொருளாதார மேம்பாட்டுக்கான புரட்சியின் பங்காளிகளாக இருப்பதற்கு கிழக்கு மக்கள் எப்போதும் இணைந்திருக்கவும்.இவ்வாறான பொருளாதார புரட்சி கிடைப்பது பெரும் வாய்ப்பாகும்.எமது ஆட்சியிலே இவ்வாறான பொருளாதார புரட்சியானது மட்டக்களப்பு மக்களுக்கும், குறிப்பாக  இளைஞர்களுக்கும் கிடைக்கயிருப்பதை நான் இன்று உறுதியளிக்கின்றேன் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தபாய ராஜபக்ஷ தெரிவித்தார்.
 

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேர்தல் பிரசாரக் கூட்டம் மட்டக்களப்பு கல்லடியில் செவ்வாய்க்கிழமை(29)மாலை 6.00மணியளவில் நடைபெற்றது.இக்கூட்டத்தில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச,பிரதியமைச்சர் வி.முரளிதரன்(கருணா அம்மான்),பாராளுமன்ற உறுப்பினர்களான எஸ்.வியாளேந்திரன்,நுவான் ரத்வத்த,முன்னாள் வடகிழக்கு மாகாண முதலமைச்சர் எஸ்.வரதராஜப்பெருமாள்,தமிழ்மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் பொதுச் செயலாளர் பூ.பிரசாந்தன், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் மாவட்ட அமைப்பாளர் பி.சந்திரகுமார்,இலங்கை மக்கள் தேசிய கட்சியின் தலைவர் என்.விஸ்ணுகாந்தன்,உட்பட பலர் கலந்துகொண்டார்கள்.

இதன்போது மட்டக்களப்பு மாவட்டத்திற்கு வருகைதந்த ஜனாதிபதி வேட்பாளர் கோத்தபாய ராஜபக்ஷ மேலும் தெரிவிக்கையில் …

எம்மால் தமிழ்மக்களின் அடிப்படைப் பிரச்சனைகளை முற்று முழுதாக செய்து முடிப்போம்.எங்களால் பாதுகாப்பான நாட்டை ஏற்படுத்தி தருவோம்.சுதந்திரம் பெற்ற ஆண்டு முதல் தமிழ்மக்களின் தமிழ்த்தலைமைகள் தமிழ்மக்களுக்கு பல உறுதிமொழியைக் கூறி செய்வோம் என்று சொல்லிய தலைவர்கள் இன்றுவரையும் செய்யவில்லை.இப்போதும் செய்து காட்டவில்லை.இனியும் தமிழ்த்தலைமைகள் சிந்தித்து செயற்பட வேண்டும்.யார் பக்கம் பிழை இருக்கின்றது பற்றி தமிழ்மக்கள் உணர்ந்து செயற்பட வேண்டும்.இதனால் தூரநோக்கமற்ற அபிவிருத்தி தடைப்பட்டுள்ளது.இதனை யதார்த்தமாக உணர்ந்து மொட்டுச் சின்னத்திற்கு வாக்களித்தால் தடைப்பட்ட அபிவிருத்தியை நாம் தொடர முடியும்.இதனால் விவசாயம்,கல்வி,சுகாதாரம்,சுற்றுலாத்துறை, உட்கட்டமைப்பு வசதிகள் மேன்மையடையும்.

இன்று புத்திஜீவிகள், வர்த்தகர்கள்,துறைசார்ந்த வல்லுந‌ர்கள் ஒன்றிணைந்து ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேர்தல் விஞ்ஞாபனத்தை எதிர்காலத் திட்டமிடலுடன் தயாரித்துள்ளார்கள்.எனது விஞ்ஞாபனத்தை தயாரித்தலில் கிழக்கைச் சேர்ந்தவர்களும்,மட்டக்களப்பு மாவட்டத்தை சேர்ந்தவர்களும் இருக்கின்றார்கள்.

இன்றைய இளைஞர்,யுவதிகளின் பிரச்சனை எனக்குத் தெரியும்.இளைஞர்களையும்,யுவதிகளையும் சரியான திட்டமிடலுடன் சவால்மிக்க தொழிநுட்ப யுகத்தில் முறையான தொழிற்பயிற்ச்சிகளையும்,திறன்களையும் கொடுத்து அவர்களுக்குரிய அடிப்படைப்பிரச்சனைகளை தீர்க்க வேண்டிய கடமையைச் செய்யவேண்டும்.தரமான கல்வி கிடைக்காததால் அவர்கள் நிர்க்கதியான நிலையில் உள்ளார்கள்.எனவே தரமான கல்வியை வழங்கி நாட்டினுடைய கல்விக்கு முன்னுரிமை கொடுத்து முதலீடு செய்வோம்.உயர்தரம் படித்து பல்கலைக்கழக கல்வியை இழந்தவர்களுக்கு பல்கலைக்கழகங்கள் கலாசாலைகள்,கல்வியல்கல்லூரிகள் அமைத்து தரமான கல்வியை பெற்றுக்கொடுப்போம்.

கைத்தொழில், தொழிற்பயிற்சிகள் வழங்கி நாட்டின் பொருளாதாரத்தை ஈட்டித்தருவோம்.உலக பொருளாதாரத்திற்கு ஏற்றவகையில் நவீன,டிஜிட்டல் தொழிநுட்ப பயிற்சிகளை வழங்கி ஒரு மில்லியன் மேற்பட்ட டொலரை ஈட்டுவதற்குரிய வருமானத்தை பெற்றுக்கொடுப்போம்.மூன்று இலட்சத்துக்கு மேற்பட்ட தொழில்வல்லுனர்களை உருவாக்கி ஆறுமாதம் முதல் ஒரு வருடத்தில் தொழில்வாய்ப்பை பெற்றுக்கொடுப்போம்.
 
இன்று இந்தியாவில் தொழிநுட்ப வளர்ச்சி விரைவாக விருத்தியடைந்து இந்தியா பொருளாதாரத்தில் முன்னேற்றம் கண்டுள்ளது.
 

இந்த நாட்டிலே நான் தரமான கல்வியை வழங்குவேன்.நாங்கள் மஹிந்த ராஜபக்ஷ காலத்தில் விவசாயிகளின் நன்மைகருதி உரமானியம் வழங்கினோம்.உணவு பாதுகாப்புடன் விவசாயத்தில் உணவு உற்பத்தியை ஊக்குவித்து நாட்டை முன்னேற்றுவேன்.கடந்த காலங்களில் நாட்டின் உணவு உற்பத்திக்காக உரமானியங்களை கடனாக பெற்ற அனைத்து விவசாயிகளின் கடனையும் நான் ஆட்சிக்கு வந்து இரத்துச் செய்வோம்.நாட்டிலே பொருளாதாரத்தை கட்டியெழுப்பு அனைத்து உதவிகளையும் செய்வோம்.நீர்ப்பாசன, நீர் முகாமைத்துவ, பசுமைப்புரட்சிகளை செய்து வறுமைப்பட்ட மக்களின் பட்டினியைப் போக்குவோம்.பாற்பண்ணையாளர்களை சிறந்த திட்டமிடலுடன் ஊக்குவிப்பு நாட்டின் தேவைகளையும்,தங்குதடையின்றி நிறைவேற்றிக் கொடுப்போம்.கொழும்பை நாங்கள் முற்றாக அபிவிருத்தி செய்தாற்போல் மட்டக்களப்பையும் அபிவிருத்தி செய்துள்ளோம்.மஹிந்த ராஜபக்ஷ காலத்தில் கல்லடிப்பாலம்,மண்முனை பாலம்,பனிச்சங்கேணிப்பாலம் போன்றவற்றை செய்து காட்டியுள்ளோம்.

என்னுடைய தேர்தல் விஞ்ஞாபனத்தில் வறுமைப்பட்ட மக்களின் அடிப்படை தேவைகளுக்கு முன்னுரிமை கொடுக்கப்பட்டு அவர்களின் பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கு திட்டமிட்டுள்ளோம்.சுகாதாரம்,கல்வி,குடிநீர்,உட்பட அனைத்து அடிப்படை வசதிகளையும் ஏற்படுத்தி கொடுப்போம்.என்மீது நம்பிக்கை வைத்துக்கொள்ளுங்கள்.என்னைப்பற்றி பொய்யான,அபாண்டமான பொய்பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றார்கள்.

பாதுகாப்பான, அபிவிருத்தியுடன் கூடிய நாட்டை உருவாக்குவதற்கு நம்பிக்கை எங்கள்மீது  வைத்துக்கொள்ளுங்கள்.அதனை நான் உங்களுக்கு கடமையையாக செய்வேன்.நான் வழங்கியை உறுதிமொழியை ஆட்சிக்கு வந்து செய்துகாட்டுவேன்.நீங்க அச்சப்படத்தேவையில்லை.நாட்டின் பாதுகாப்பை சிறப்பாக முன்னெடுத்து இன,மதம்,மொழி கடந்து மக்களுக்கு சேவையாற்றுவேன்.எனக்காக நீங்க மொட்டுச் சின்னத்திற்கு வாக்களியுங்கள்.

நான் நீங்க செய்த அந்த கைங்கரியத்திற்கு எப்போதும் நன்றியுடையவனாக இருப்பேன்.என்னை விசுவாசமாக நம்பிக்கையுடன் ஏற்றுக்கொள்ளுங்கள்.நீங்க மொட்டுச் சின்னத்திற்கு வாக்களிப்பதால் இந்த நாட்டை சௌபாக்கியமான நாடாக கட்டியெழுப்ப முடியும்.அதனால் நாம் அனைவரும் தலை நிமிர்ந்து வாழ முடியும்.இதற்கு மட்டக்களப்பு மாவட்ட மக்களும் பாங்காளியாக மாறுங்கள்.ஒற்றுமையான சகோதரத்துவத்துடன் அனைவரும் பாதுகாப்பான நாட்டை கட்டியெழுப்ப முடியும்.

கிழக்கு மாகாணத்தை மையப்படுத்திய புதியதோர் பொருளாதார மேம்பாட்டுக்கான புரட்சியின் பங்காளிகளாக இருப்பதற்கு கிழக்கு மக்கள் எப்போதும் இணைந்திருக்கவும்.இவ்வாறான பொருளாதார புரட்சி கிடைப்பது பெரும் வாய்ப்பாகும்.எமது ஆட்சியிலே இவ்வாறான பொருளாதார புரட்சியானது மட்டக்களப்பு மக்களுக்கும், குறிப்பாக  இளைஞர்களுக்கும் கிடைக்கயிருப்பதை நான் இன்று உறுதியளிக்கின்றேன் எனத்தெரிவித்தார்.

இதன்போது கிழக்குத் தமிழர் ஒன்றியத்தின் 31கோரிக்கைகள் அடங்கிய மகஜரை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தபாய ராஜபக்ஷவிடம் தலைவர் எஸ்.கோபாலகிருஸ்ணன் கையளித்தார்.

 

Related posts