குற்றவாளிகளின் மனித உரிமைகளைப் பாதுகாப்பதை விடவும், குற்றச்செயல்களால் பாதிக்கப்படுபவர்களின் மனித உரிமைகளைப் பாதுகாப்பதே அவசியமானதாகும்”

“குற்றவாளிகளின் மனித உரிமைகளைப் பாதுகாப்பதை விடவும், அவர்களின் குற்றச்செயல்களால் பாதிக்கப்படுபவர்களின் மனித உரிமைகளைப் பாதுகாப்பதே அவசியமானதாகும்”இவ்வாறு தேசிய ஒற்றுமைக்கான சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் சிரேஷ்ட சட்டத்தரணி மனோஜ் கமகே தெரிவித்துள்ளார்இந்நிலையில், போதைப்பொருள் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை வழங்குவது மனித உரிமை மீறல் எனின், அக்குற்றவாளிகளின் குற்றச்செயல்களால் பாதிக்கப்பட்டவர்களின் மனித உரிமைகள் ஏற்கனவே மீறப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.எதிர்வரும் இரண்டு மாதங்களில் மரண தண்டனையை அமுல்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கவுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் நாடாளுமன்றில் அறிவித்திருந்தார்எனினும், ஜனாதிபதி வெளியிட்ட இந்த கருத்து தொடர்பில் மனித உரிமை அமைப்புக்கள் மற்றும் மனித உரிமை ஆர்வலர்கள் கடும் எதிர்ப்பை வெளியிட்டு வருகின்றனர்

Related posts