கூலித்தொழிலாளர்களுக்கு தொழில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கும் நிவாரணபம்

மட்டக்களப்பு மாவட்டத்தில் கொரோனா அபாயம் ஏற்ப்பட்ட காலம் முதல் இன்றுவரை மாவட்டத்தில் கூலித்தொழிலாளர்களுக்கு தொழில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கும் நிவாரணப் பொருட்களை மாவட்ட செயலகத்தினுடாக பிரதேச செயலங்களின் மூலமாக மக்களுக்கு வழங்கப்பட்டு வருவதாக மாவட்ட அரசாங்க அதிபரும் மாவட்ட செயலாளருமான திருமதி கலாமதி பத்மராஜா அரசாங்க தகவல் திணைக்களத்தின் மாவட்ட ஊடகப்பிரிவிற்கு தெரிவித்தார்.
 
மட்டக்களப்பு மாவட்டத்தில் 14 பிரதேச செயலகங்களுக்குமாக இதுவரை 40’909 நிவாரண உலருணவுப் பொதிகள் வழங்கப்பட்டுள்ளது இன்னும் 17’868 உலருணவுப்பொதிகள் கிடைக்கவுள்ளதாகவும் அவை கிடைக்கப்பெற்றதும் அவற்றினையும் பங்கிடுசெய்வதற்கு பிரதேச செயலாளர்கள் தயாராகவுள்ளதாகவும் தெரிவித்தார்.
 
மாவட்டத்தில் இயங்கிவரும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மற்றும் தனிப்பட்ட நபர்கள் அதனை தவிரவும் தாங்களாக முன்வந்தும் உதவும்செயல்த்திட்டங்களும் பிரதேச செயலாளர்கள் மூலமாகவும் வழங்கப்பட்டது இதில் குறிப்பாக தொண்டு நிறுவனங்களுடாக 13795 உணவுப்பொதிகளும் தனிப்பட்ட நபர்கள் மூலமாக கிடைத்த நிதியூடாக 870 உணவுப்பொதிகளும் மேலும் தனிநபர்களாக பொதிசெய்த உணவுப்பெருட்கள் 8’376 பிரதேச செயலகங்களுடாக வழங்கப்பட்டுள்ளது அதனைத்தவிரவும் அரசாங்த்தினால் முன்னெடுக்கப்படவுள்ள நிவாரணப்பணிகளும் முன்னெடுக்கப்பட்டுவருகின்றது. 

Related posts