நெடுந்தீவு கடற்பரப்பு ஊடாக இலங்கைக்கு, கேரள கஞ்சாவைக் கடத்த முயன்ற இந்திய மீனவர்கள் நால்வரை, காரைநகர் கடற்படையினர் (16) கைது செய்துள்ளனர்.
ரோந்து கடமையில் ஈடுபட்டிருந்த கடற்படையினர், சந்தேகத்துக்கிடமான முறையில் இலங்கை கடற்பரப்புக்குள் நுழைய முற்பட்ட படகை மறித்து சோதனை மேற்கொண்டனர்.
இதன் போது படகில் மிகவும் சூட்சுமமான முறையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 37கிலோகிராம் கேரள கஞ்சா பொதிகள் கைபெற்றப்பட்டன.
கைதான மீனவர்கள் நால்வரும் தமிழக மாநிலத்தினை சேர்ந்தவர்கள் என விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
கைதுசெய்யப்பட்ட மீனவர்களை, பொலிஸாரிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.