கொரோனா நோய்த் தொற்றுக் காரணமாக ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலையினால் தொழில்களை இழந்து வாழும் மக்களுக்கு நிவாரண உதவி.

முனைப்பு சுவிஸ் கிளையின் அனுசரணையில் முனைப்பு ஸ்ரீ லங்கா நிறுவனத்தினால் முன்னெடுக்கப்படும்   உலர் உணவு பொதிகள் வழங்கும் 3ம் கட்ட நடவாடிக்கையில், மட்டக்களப்பு மாவாட்டத்தின் மண்முனை மேற்கு, கிரான் ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு 1000 ரூபா பெறுமதியான ஒரு தொகுதி  உலர் உணவுப் பொதிகள் இன்று செவ்வாய்கிழமை வழங்கி வைக்கப்பட்டது. 

குறித்த நிவாரணப் பொதிகளை முனைப்பு ஸ்ரீ லங்கா நிறுவனத்தின் தலைவார் மாணிக்கப்போடி சசிகுமார் ,செயலாளர் இ.குகநாதன்,பொருளாளர் அ,தயானந்தரவி போன்றோர் மண்முனை மேற்கு பிரதேச செயலாளர் எஸ் சுதாகர், கிரான் பிரதேச செயலக உதவி பிரதேச செயலாளர் யோகராஜா ஆகியோரிடம் கையளித்தனர்.

 மண்முனை மேற்கு பிரதேச செயலாளர் மற்றும் கிரான் பிரதேச செயலாளர் ஆகியோருடன் மேற்கொண்ட கலந்துரையாடலுக்கமைவாக மேற்படி உலர் உணவுப் பொதிகள் எமது முனைப்பு நிறுவனத்தினால் வழங்கிவைக்கப்பட்டதாக நிறுவனத்தின் தலைவர் மாணிக்கப்போடி சசிகுமார் தெரிவித்தார்.

முனைப்பு நிறுவானமானது யுத்தம் மற்றும் இயற்கை அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட வறிய மக்களுக்கான வாழ்வாதார மேம்பாட்டுத் திட்டம் மற்றும் கல்வி அபிவிருத்தித் திட்டத்தினை பிரதானமான செயற்படுத்தி வந்தாலும் அவ்வப்போது இடாம் பெறுகின்ற இயற்கை அனர்த்தங்களின் போது பாதிக்கப்படுகின்ற மக்களுக்கான நிவாரணப் பணியிலும் பாரிய பங்களிப்பை வாழங்கி வருவதாகவும்  முனைப்பு ஸ்ரீ லங்கா நிறுவானத்தின் தலைவர்  சசிகுமார்  மேலும்  தெரிவித்தார்.

????????????????????????????????????

Related posts