கொரோனா வைரஸ் எதிரொலி-நிர்க்கதியான குடும்பங்களுக்கு விசேட அதிரடிப்படை நிவாரணம் வழங்கி வைப்பு

கொரோனா வைரஸ் தாக்கத்தின் எதிரொலியாக அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு சட்டத்தினால் வாழ்வாதாரத்தை இழந்த வறுமைக்கோட்டில் உள்ள  குடும்பங்களுக்கு சமைப்பதற்கான பொருட்களை விசேட அதிரடிப்படையினர் வழங்கி வைத்தனர்.
 
அம்பாறை மாவட்டத்தின் கல்முனை பிராந்தியத்தில் உள்ள விசேட அதிரடிப்படையினரின் ஏற்பாட்டில் சுமார் 75க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு செவ்வாய்க்கிழமை(31) முற்பகல்  இப்பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டன.
 
கல்முனை பிராந்திய விசேட அதிரடிப்படை பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் எம்.எச்.ஏ மதுரங்கவின் தலைமையில்   வாழ்வாதாரத்தை இழந்து சிரமப்பட்ட தாய் தந்தையை இழந்தவர்கள் வயோதிபர்கள் விதவைகள் ஆகியோருக்கு இப்பொருட்கள் வழங்கப்பட்டது.
 
.இப்பொருட்தொகுதியில் தேங்காய், சோயா, கடலை, பருப்பு ,நெருப்புப்பெட்டி , உப்பு, சீனி, கோதுமை மா ,அரிசி ,உள்ளிட்ட  அத்தியவசியப்பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டன

Related posts